/tamil-ie/media/media_files/uploads/2020/11/Vijay-TV-Senthoora-Poove-Serial-Tamil-Serial-News.jpg)
செந்தூரப்பூவே சீரியல்
Tamil Serial News: விஜய் டிவி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ’செந்தூரப்பூவே’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 2 குழந்தைகளுக்குப் பிறகு மனைவியை இழந்த துரைசிங்கமும், வயிற்றில் குழந்தையுடன் காதல் கணவனை இழந்த ரோஜாவும், இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கும் கதை தான் செந்தூரப்பூவே சீரியல்.
படிப்பை தொடர கடன் வேண்டுமா? கைக்கொடுக்கும் எஸ்பிஐ .. சிறப்பு சலுகைகளும் உண்டு!
துரைசிங்கத்தின் தாய் மாமன் மகள் ஐஸ்வர்யா, அவரை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என அந்த திருமணத்தை நிறுத்த, பல தில்லு முல்லு வேலைகளை செய்து வருகிறார். ரோஜாவை கடத்துகிறாள். ஆனால் ரோஜாவின் தோழி சந்தியாவோடு இணைந்து துரைசிங்கம் அவளை காப்பாற்றி விடுகிறார். சிறப்பு விருந்தினராக நடிகர் பாக்யராஜ் கலந்துக் கொண்டு, துரை சிங்கம் – ரோஜா நிச்சயதார்த்ததை நடத்தி வைத்தார். இதற்கிடையே இந்த திருமணத்தை நிறுத்தி, துரை சிங்கத்தை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென ஐஸ்வர்யா பல்வேறு வில்லத் தனங்களை செய்கிறாள்.
துரை சிங்கத்தின் மூத்த மகள் கனிமொழியிடம் இல்லாது, பொல்லாதை சொல்லி குழப்பி விடுகிறாள். அப்போது வந்த துரை சிங்கத்தின் அம்மாவும், தங்கையும் ஐஸ்வர்யாவை திட்டி அனுப்பி விட்டு, இதையெல்லாம் நம்ப வேண்டாம் என கனியிடம் கூறுகிறாள். ’அப்பா நல்லதுக்கு தான் எல்லாத்தையும் செய்வேன்’ என்று கூறிய துரை சிங்கத்திடம், ‘நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க அப்பா’ என தனது சம்மதத்தைத் தெரிவிக்கிறாள் கனிமொழி.
பாடல்களால் ஷிவானி-பாலாவை காலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ்!
இது ஒருபுறமிருக்க, ரோஜாவை அடித்து, வாயை மூடி, கயிற்றால் கட்டி விட்டு, பூக்களால் முகத்தை மறைத்து விட்டு, மணமகளாய் வந்து அமருகிறாள் ஐஸ்வர்யா. தாலி கட்டும் நேரத்தில் அதையும் துரை சிங்கம் கண்டுப்பிடித்து விடுகிறார். இப்படி இந்த தாலி கட்டும் எபிசோட், பல நாட்களாக இழுத்துக் கொண்டிருக்க, பல தடைகளை தாண்டி ரோஜா கழுத்தில் தாலி கட்டி விட்டார் துரை சிங்கம்! இந்த திருமணத்தை நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் நடத்தி வைக்கிறார்.
இனி ஐஸ்வர்யா குடும்பத்தினரை ரோஜா எப்படி சமாளிக்கப் போகிறாள்? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.