Tamil Serial News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ மற்றும் ‘செந்தூரப்பூவே’ இரண்டு சீரியல்களும் இந்த வாரம், ஒன்றாக இணைந்து மக சங்கமமாக ஒளிபரப்பாகின்றன.
புதிய ஜோடிகள் மாயன்-மகா, துரைசிங்கம்-ரோஜா ஆகியோருக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ரோஜாவும், துரைசிங்கமும் ஒன்று சேரக் கூடாது என அவர்களை பிரிப்பதற்கு ஐஸ்வர்யா ஒரு பக்கம் பிளான் போடுகிறாள். துரைசிங்கம், ரோஜா இருவருக்கும் செய்ய வேண்டிய சடங்குகள் எதையும் செய்யாததால் இப்போதே செய்யவேண்டுமென பாலும் பழமும் கொடுக்கிறார்கள்.
அதை துரைசிங்கம் சாப்பிட்டுவிட, அப்போது கயல், கனி இருவரும் விளையாடிக் கொண்டிருந்த பந்து ரோஜா மீது விழுந்து பால் கொட்டிவிடுகிறது. இப்படி தடங்கல் ஆகிவிட்டது என துரைசிங்கத்தின் அம்மா வருத்தப்படுகிறார். ரோஜாவிடம் அன்று மகா கூறியது எனக்கு புரியவில்லை, அதை எனக்கு தெளிவாக சொல்லுங்கள் என்கிறார் துரைசிங்கம்.
நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன், அது உங்களுக்கு தெரியும் எனக் கூறும் ரோஜா, தான் அன்பை காதலித்து திருமணம் செய்து கொண்டதையும், அவன் மரணம் அடைந்ததையும், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததற்கு ஆதாரமாக ஒரு குழந்தை தன் வயிற்றில் வளர்கிறது என்றும் கூறுகிறாள். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் துரைசிங்கம்.
இதைப் பற்றி நீ என்னிடம் கோவிலில் சொல்லவே இல்லை, எனக்கு நன்றாக தெரியும், நீ பொய் சொல்கிறாய். எந்த ஒரு ஆணும், வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டான். நீ என்னை ஏமாற்றி விட்டாய் என கோபத்துடன் பேசுகிறார் துரைசிங்கம்.
நம்ம சொன்னதையெல்லாம் கேட்டு, அதற்கு அவர் சம்மதித்ததால் தானே நாமும் இந்த திருமணத்துக்கு சம்மதித்தோம் என குழப்பத்தில் இருக்கிறாள் ரோஜா. கோபம் தலைக்கேறிய துரை சிங்கம், வெளியே போவதாகக் கூறி காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். போகும் போது கோயிலில் என்ன நடந்தது என்பதை மீண்டும் யோசிக்கிறார். அந்த விஷயங்கள் துரை சிங்கத்தின் நினைவுக்கு வருமா? ரோஜாவின் நிலை என்னவாகும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Senthoora poove durai singam roja vijay tv serial news
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி