/tamil-ie/media/media_files/uploads/2021/01/444-Copy-2-3.jpg)
Senthoora Poove roja Senthoora Poove serial
Senthoora Poove roja Senthoora Poove serial : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’செந்தூரப்பூவே’ சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
மனைவியை இழந்த துரை சிங்கம், இரண்டாவது மகள் கயலின் ஆசைப்படி அவளது ஆசிரியை ரோஜாவை திருமணம் செய்துக் கொள்ள முன் வருகிறார். இது மூத்த மகள் கனிமொழிக்கு பிடிக்கவில்லை என்றாலும், பின்னர் சம்மதிக்கிறாள். ஆனால் உங்களுக்கு குழந்தைகள் என்றால் அது நானும் கயலும் தான். இனி ஒரு குழந்தையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது அப்பா, என மனதிற்குள் சொல்லிக் கொள்கிறாள்.
அன்புவை காதலித்த ரோஜா அவனோடு வாழ்கிறாள். பின்னர் அவன் இறந்துவிட, அவனது குழந்தை ரோஜாவின் வயிற்றில் வளர்கிறது. அந்தக் குழந்தையை காப்பாற்ற துரை சிங்கத்தை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறாள் ரோஜா. அதனால் திருமணத்துக்கு சம்மதிக்கிறாள்.
இருப்பினும் இவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு வில்லத்தனங்களில் ஈடுபடுகிறாள் ஐஸ்வர்யா.
#SenthooraPoove இல்.. #VijayTelevisionpic.twitter.com/cH0RZl7Pzu
— Vijay Television (@vijaytelevision) January 26, 2021
அதன் ஒரு கட்டமாக தான் கயலை ஃபோனில் மிரட்டி குழந்தைகளிடம் வெறுப்பை காட்ட வற்புறுத்துகிறாள். அதுஅம்ட்டுமில்லை, துரைசிங்கத்திடம் எல்லா உண்மையும் சொல்லிவிடுவேன் என்றும் மிரட்டுகிறாள். இதற்கு ஆரம்பத்தில் பயந்து நடுங்கிய ரோஜா இப்போது எதிர்த்து பேச தொடங்கி விட்டாள். அதன் ஒரு பகுதி தான் இந்த ட்விஸ்ட்டே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us