Tamil Serial News: திருப்பங்கள் நிறைந்த செந்தூரப்பூவே சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் முதன் முறையாக, சினிமாவிலிருந்து, சின்னத்திரைக்குள் நுழைந்திருக்கிறார் நடிகர் ரஞ்சித். நடுத்தர வயது (45) கொண்ட துரைசிங்கத்தைப் பற்றிய கதை தான் செந்தூரப்பூவே. மனைவியை இழந்த இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். இவருக்கு கயல்விழி மற்றும் கனிமொழி என இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு, மறு திருமணம் பற்றி துரைசிங்கம் யோசிக்கவில்லை.
திருமணத்துக்காக சின்ன இடைவெளி: கல்யாண வீடு ஸ்பூர்த்தி!
இதற்கிடையே துரை சிங்கத்தின் மகள்கள் தங்களது ஆசிரியை ரோஜா மீது உயிராய் இருக்கிறார்கள். துரை சிங்கத்தின் அம்மாவும், தங்கையும் ஜோசியரை பார்க்க சென்றபோது, ‘உங்க செல்ல பேத்தி கயல்விழியோட ஜாதக படி, உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கற யோகம் இருக்கு’. அந்த பொண்ண, கயலே கூட செலக்ட் பண்ணலாம் ‘ என்றார் ஜோசியர். பாடம் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கு வரும் ஆசிரியை ரோஜாவிடம், பிள்ளைகள் அன்பாக இருப்பதைப் பார்த்து மொத்தக் குடும்பமும் சந்தோஷப் படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து, துரை சிங்கத்துக்கு, ரோஜாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள், அவரது அம்மாவும், தங்கையும்.
மறுபுறம் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அன்புவை இழந்துவிட்டு, அவன் குழந்தையை வயிற்றில் சுமந்துக் கொண்டு இருக்கிறாள் ரோஜா. இந்த விஷயத்தை துரைசிங்கத்திடம் சொல்லி விடுகிறாள் ரோஜா. இந்த திருமணத்திற்கு சம்மதித்தால் தான், வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்ற முடியும் என்பதால், ரோஜா இதை ஏற்றுக் கொள்கிறாள். இதற்கிடையே இந்த திருமணத்தை நிறுத்த பலரும் முயற்சிக்கிறார்கள்.
4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை இருக்காம்… வானிலை மையம் அறிவிப்பு!
ரோஜாவுக்கு திருமணம் நடக்கப் போவதை அறிந்த அன்புவின் அம்மா, மண்டபத்துக்கே வந்து இந்த கல்யாணத்தை நிறுத்தப் போவதாக கூறுகிறார். இதனால் மீண்டும் பிரச்னையா என ரசிகர்கள் நினைக்கிறார்கள். உடனே அன்புவின் அம்மா காலில் விழும் ரோஜாவின் அம்மா, உங்க பையன் எங்கயும் போகல. எம் பொண்ணு வயித்துல உங்க பையனோட குழந்தை வளருது என்கிறார். இதனால் திகைத்துப் போகிறார் அன்புவின் அம்மா. அடுத்துஇ என்ன நடக்கும்? தொடர்ந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”