vijay tv serial: கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக சின்னத்திரை பெரியத்திரை படப்பிடிப்புகள் இல்லாமல் இருந்தன. இந்த நிலையில் தமிழக அரசு முதலில் 20 பேர்களுடன் சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அனுமதி வழங்கியது.
ஆனால், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 20 நபர்களுடன் கண்டிப்பாக படப்பிடிப்பு நடத்த முடியாது. மேலும் ஆட்களை வைத்து ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதனால், 60 நபர்களை வைத்து சின்னத்திரை ஷூட்டிங் நடத்தலாம் என்று தமிழக அரசு கடந்த வாரம் அனுமதி அளித்து இருந்தது.
இந்த நிலையில், விஜய் டிவி லாக்டவுனுக்கு முன்பே வெகு விரைவில் என்று ப்ரோமோ வெளியிட்டு வந்த செந்தூரப்பூவே சீரியலை, இப்போது வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பத் திட்டமிட்டு, ப்ரோமோ வெளியிட்டு வருகிறது. விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சி, சீரியல்கள், என்று ஒளிபரப்பத் திட்டமிட்டு, வரும் திங்கள் முதல் ஒரு சீரியல், ஒரு சமையல் நிகழ்ச்சி என்று ஒளிபரப்பாக உள்ளது. செந்தூரப்பூவே சீரியலில் நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகி ரோஜாவாக கலர்ஸ் தமிழ் சானலில் தறி சீரியலில் நடித்த ஸ்ரீநிதி நடித்துள்ளார்.
ஜீ தமிழ் டிவியில் பொன்வசந்தம் என்று ஒரு சீரியல் நடுத்தர வயதுக்கும் சற்றே குறைவான வயது ஆண் ஒருவருக்கும், இளம் பெண் ஒருவருக்கும் உண்டாகும் காதலை சொல்லும் விதமாக இருந்தது. இதே பாணியில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியல் இருக்கிறது. சற்றே வயதான தோற்றத்தில் இருக்கும் ரஞ்சித்தை,, கதாநாயகி ஸ்ரீநிதி காதலிப்பார். ஜோடிப்பொருத்தம் நல்லாருக்கு இல்லேன்னு ஸ்ரீநிதி கேட்க, ஜோடிப் பொருத்தம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...
இந்த வயசுதான் என்று இழுப்பார் ரஞ்சித். வயசு என்ன பெரிய வயசு.. மனசுதான் முக்கியம் என்று கதாநாயகி சொல்வது போல ஒரு காட்சியை விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டு வருகிறது. அதே போல செந்தூரப்பூ வேணும் மாமா என்று நாயகி கேட்க, காடு, மேடு எல்லாம் சுற்றி வந்த ரஞ்சித், பூக்களை தொட்டி தொட்டியாக எடுத்து வந்துவிடுவார். இருந்தாலும் செந்தூரப்பூவைத் தேடி ஓடுவார்.கடைசியில் ஒரு ஆசிரியர், செந்தூரப்பூ என்று ஒரு மலர் இல்லை தம்பி. அது வெறும் கற்பனை மலர் என்று சொல்வார்.
அப்போதுதான் கதாநாயாகனுக்கு உண்மை உரைக்கும். செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே என்று 16 வயதினிலே படத்தில் ஒரு பாடல் வரும். இந்த பாடல் இசைஞானி இசையில் கங்கை அமரன் எழுதிய பாடல். கங்கை அமரன் செந்தூரப்பூவே என்று ஒரு மலர் இல்லை என்று சொல்லி இருப்பார். இதை வைத்தே இந்த காட்சியை எடுத்து இருக்கிறது சீரியல் குழு.
ரீல் vs ரியல்... ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்!
ரோஜா....பூ நிறைய கிடைச்சுது...ஆனா, எங்கே பார்த்தாலும் தேடிட்டேன்.. நீ கேட்ட செந்தூரப்பூ இல்லை என்று நாயகன் சொல்ல, எங்கே நான் பார்க்கிறேன் என்று கதவைத் திறந்துக்கொண்டு பார்க்கிறார்... ரெமோ நந்தினிக்கு கொடுத்த மாத்ரி ஒரே பூந்தொட்டி...நான் நினைச்சது கிடைச்சுருச்சு என்று நாயகனின் மார்பில் சாய்ந்துக்கொள்கிறாள் நாயகி. இதுதான் விஜய் டிவி இப்போது வெளியிட்டு வரும் செந்தூரப்பூவே ப்ரோமோ.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“