scorecardresearch

நாய் சேகர் கெட்டப்பில் மிரட்டிய டிவி நடிகை: யாருன்னு கண்டுபிடிங்க!

யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம். என்ன getupnu சொல்லுங்க என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்

நாய் சேகர் கெட்டப்பில் மிரட்டிய டிவி நடிகை: யாருன்னு கண்டுபிடிங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று முக்கியமான விஜய் டிவி பிரபலமாக மாறியிருக்கும் அறந்தாங்கி நிஷா, பிபி ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது நடன திறமையை மக்களுக்கு நிரூபித்துள்ளார்.

காமெடி, டான்ஸ் , சமையல் என ஆல்ரவுண்டராக கலக்கும் அறந்தாங்கி, சுவற்றில் பின்பக்கமாகத் திரும்பி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தைத் தெறிக்கவிட்டுள்ளார். நாய் சேகர் வடிவேலு கெட்டப்பில் இருக்கும் அவர், ‘யாருன்னு கண்டுபிடிக்க பாப்போம். என்ன getupnu சொல்லுங்க’ என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது, அவருக்கு ரசிகர்கள் பலர் பதிலளித்து வருகின்றனர். 


அதில் ஒருவர், நாய் சேகர்… நிஷா அக்கா என சிரிக்கும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், Enga amma sathyama naanum rowdithandaa….Naai sekar என கூறியுள்ளார். அதே போல, மற்றொரு நபர், வடிவேல் பாலாஜி என கமெண்ட் செய்துள்ளார்.
சின்னதிரையின் நயன்தாரா என தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்ட நிஷா, சமீப காலமாக கிடைக்கும் வாய்ப்புகளை முயற்சி செய்து தனது திறமையை மக்களுக்கு நிரூபித்து வருகிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Serail actress new getup look like nai sekar