மீண்டும் சீரியலில் நடிகர் அர்னவ்
திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ் மீது சமீபத்தில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அர்னவ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனிடையே அர்னவ் மீண்டும் சீரியல்ல நடிக்க தொடங்கியுள்ளார்.
தீபிகா படுகோனேவுக்கு டூப் போட்ட சீரியல் நடிகை
கலர்ஸ் தமிழின் பச்சக்கிளி சீரியலில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வரும் நடிகை அஞ்சலி ராவ், ஜீ தமிழின் திருமதி ஹிட்லர் சீரியல் மூலம் பிரபலமானார். மேலும் தென்னிந்திய அழகி போட்டியில் இறுதிக்கட்டவரை சென்ற இவர் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தில் அவரின் தங்கையாக நடித்துள்ளார். இதனிடையே தமிழில் வெளியான ரஜினியின் கோச்சடையான படத்தில் தீபிகா படுகோனேவுக்கு டூப் போட்டவர் அஞ்சலி ராவ் என்று தற்போது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் போட்டியாளரை சந்தித்த பிரபலம்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே ஜி.பி.முத்து தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வெளியேறிவிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடன இயக்குனர் சாந்தியை ஜி.பி.முத்து நேரில் சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமா நாயகி ஆகிவிடுவாரா பிக்பாஸ் ஜனனி?
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கையில் இருந்து பங்கேற்றுள்ள போட்டியாளர் ஜனனி, தனித்திறமையை வெளிப்படுத்தும் டாஸ்கில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த நடனம் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், பிக்பாஸில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகைகளின் வரிசையில் ஜனனி இணைவது உறுதி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
வெண்பாவின் நிலைமை என்ன?
சின்னத்திரையின் பாரதி கண்ணம்மா சீரியலில், வெண்பா பாரதியை ஏமாற்றி தனது கழுத்தில் தாலி கட்ட சொன்னது தெரிந்து பாரதி வெணபாவை திட்டிவிட்டு சென்றுவிட்ட நிலையில், ரோகித் தற்போது வெண்பாவை திருமணம் செய்துகொண்டார். இதனிடையே வெண்பாவின் அம்மா ரோகித் பெயரில் தனது அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்துவிட்டார். மேலும் வெண்பா ரோகித்தை விவாகரத்து செய்யும் நிலைக்கு சென்றால் வெண்பாவுக்கு சொத்தில் ஒரு பைசா கூட கிடையாது என்று சொல்லி விடுகிறார். இதனால் வெண்பா தற்போது இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“