Advertisment

ஓரினச்சேர்க்கை... திருநங்கையுடன் உறவு... நடிகர் அர்னவ் குறித்து திவ்யா பகீர் புகார்

அர்னவ் ஓரினச்சேர்க்கையில் இருந்த ஜெஸ்டின் என்ற அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் அர்னவ் ஒரு பாலியல் மிருகம் என்றும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
Jun 05, 2023 21:19 IST
Divya Sridhar

அர்னவ் - திவ்யா ஸ்ரீதர்

சின்னத்திரை நடிகர் அர்னவ் ஓரினச்சேர்க்கை, பெண்கள் மற்றும் திருநங்கையுடன் தொடர்பு என அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்த நடிகை திவ்யாவுக்கு தற்போது அர்னவ் ஆடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

சின்னத்திரை நடிகர் அர்னவ் திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்ட நிலையில், அர்னவ் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர், திருநங்கையுடன் தொடர்பு வைத்திருந்தவர், ஜெஸ்டின் என்ற இளைஞருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தவர் என்று திவ்யா அர்னவ் மீது புகார்களை அடுக்கியுள்ளார்.

மேலும் அர்னவ் ஓரினச்சேர்க்கையில் இருந்த ஜெஸ்டின் என்ற அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் அர்னவ் ஒரு பாலியல் மிருகம் என்றும் கூறியுள்ளார். அர்னவ் குறித்து திவ்யாவின் இந்த குற்றச்சாட்டு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு அர்னவ் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் திருமணமான 45 நாட்கள் நானும் திவ்யாவும் பேசவே இல்லை. அதற்கு காரணம் அவர் தகாத உறவில் இருந்து வந்தார். இநத விஷயம் எனக்கு தெரியவந்தபோதுதான் நான் திவ்யாவிடம் பேசுவதை நிறுத்த தொடங்கினேன். கணவர் இருப்பதை மறைத்து தன்னுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தை இருக்கும் நிலையில், அந்த குழந்தை தொடர்பான திவ்யாவை இதுவரை தரக்குறைவாக எதுவும் பேசவில்லை.

அதேபோல் நான் சிறை சென்ற நாள் இரவு பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார் திவ்யா. செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்து வந்த விரக்தியில் நான் இருக்கிறேன். அந்த பெண் குழந்தை பாதிக்கப்படுமே என்பதால் தான் திவ்யாவின் தகாத உறவை பற்றி நான் வெளியில் சொல்லவில்லை. ஆனால் இப்போது அவர் என்னை இவ்வளவு தரக்குறைவாக பேசிவிட்டார். ஆனால் காலம் வரும்போது திவ்யா யாருடன் தகாத உறவில் இருந்தார் என்பதை தெரிவிப்பேன்.

முன்னாள் கணவர் அடிக்கிறார் துன்புறுத்துகிறார் என்று சொல்லித்தான் திவ்யா விவாகரத்து பெற்றுள்ளார். அதே ஐடியாவை தான் என்னிடமும் பயன்படுத்தியுள்ளார். அதேபோல் நான் ஓரினச்சேர்க்கையில் இருந்ததாகவும் ஜெஸ்டின் என்ற அந்த இளைஞர் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார். அப்படி அவர் இறந்திருந்தால் அவரது இறப்பு சான்றிதழை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். அர்னவின் இந்த விளக்கம் இணையத்தில் வைரலாகி வருமத் நிலையில், திவ்யா தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment