எனக்காக ஒரே நாளில் முஸ்லீமாக மாறுனான்; ஆனா நான் ரிஜக்ட் பண்ணிட்டேன்: சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் லவ் ஸ்டோரி!

ஃபரீனா ஆசாத் தன் வாழ்வில் தனக்கு நடந்த ஒரு ப்ரபோஷல் பற்றி கூறியுள்ளார். அந்த பையன் ஒரே நாளில் முஸ்லீமா மாறியும் தான் அவனை மறுத்துவிட்டதாக கூறினார்.

ஃபரீனா ஆசாத் தன் வாழ்வில் தனக்கு நடந்த ஒரு ப்ரபோஷல் பற்றி கூறியுள்ளார். அந்த பையன் ஒரே நாளில் முஸ்லீமா மாறியும் தான் அவனை மறுத்துவிட்டதாக கூறினார்.

author-image
WebDesk
New Update
farina azad

பார்வையாளர்களைக் கவர்ந்து, சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஃபரீனா ஆசாத். தொகுப்பாளினியாகத் தனது பயணத்தைத் தொடங்கி, பிறகு நடிப்பின் மூலம் பலரின் அன்பைப் பெற்றார். பிஹைண்ட்வுட்ஸ் டிவியில் அவர் அளித்த ஒரு பேட்டி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவரது காதல் மற்றும் திருமணம் குறித்த அவரது வெளிப்படையான கருத்துகள் பலரையும் ஈர்த்துள்ளன.

Advertisment

ஃபரீனாவின் பயணம் ஒரு தொகுப்பாளினியாகத் தொடங்கியது. அவரது சுறுசுறுப்பான, துடிப்பான பேச்சுத்திறன் பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாகக் கொண்டு சென்றது. பின்னர், அவர் நடிப்பின் பக்கம் திரும்பினார். "பிரியாத வரம் வேண்டும்" என்ற சீரியலில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால், "பாரதி கண்ணம்மா" சீரியலில் அவர் ஏற்று நடித்த 'வெண்பா' என்ற கதாபாத்திரம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் அவர் காட்டிய உணர்ச்சிபூர்வமான நடிப்பு பலரையும் கவர்ந்தது.

இந்த கதாபாத்திரத்தின் மூலம், மக்கள் மத்தியில் 'வெண்பா' என்ற பெயரிலேயே அறியப்பட்டார். ஃபரீனாவின் துடிப்பான பேச்சும், திறமையான நடிப்பும் அவரது தனித்துவமான அடையாளமாக மாறியது.  அவர் விஜய் டிவி உப்பு புளி காரம் சீரிசிலும் நடித்துள்ளார். திரை வாழ்க்கைக்கு வெளியே, ஃபரீனா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரது கணவர் ரஹ்மான் உபைதுக்கு, சமூக வலைத்தளங்களில் ஃபரீனாவுக்கு இருக்கும் ஆதரவு குறித்து அவ்வப்போது ஆச்சரியம் ஏற்படுவதுண்டு. ஃபரீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதில் அவர் தனது அன்றாட வாழ்க்கைக் குறிப்புகள், ஃபோட்டோஷூட்டுகள் மற்றும் குடும்ப தருணங்களை பகிர்ந்து கொள்வார்.

ஃபரீனா ஆசாத், நடிப்பிலும், தொகுப்பாளினியாகவும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரது எளிமையான மற்றும் அன்பான அணுகுமுறை, அவரைப் பலருக்கும் நெருக்கமான ஒருவராக மாற்றியுள்ளது. இப்படியாக ஃபரீனாவின் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கையில் பிஹைன்வுட்ஸ்டிவி யூடியூப் பக்கத்தில் அளித்த பேட்டியில் தனக்கு நடந்த ஒரு ப்ரபோசல் நிகழ்வு பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment
Advertisements

திருமணத்திற்கு முன்பு எப்போதோ ஒரு முறை ஒரு பையன் தன்னை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் எங்கள் வீட்டில் முஸ்லீம் பையன்தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பையன் நான் முஸ்லீம் பையன் என்ன செய்வானோ அதை செய்துவருகிறேன் என அடுத்த நாளே மூஸ்லீமாக மாறி வந்ததாக அவர் கூறினார். ஆனால் இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று அதை அப்படியே முடித்துவிட்டாராம். பின்னர் ஃபரீனா, தனது நீண்ட நாள் நண்பரான ரஹ்மான் உபைதை மணந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது, இருவரும் பரஸ்பரம் தங்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்று, திருமணம் செய்து கொண்டனர். 

Tamil Serial Update Farina Azad

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: