தமிழ் சின்னத்திரை நடிகர் நவீன் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே எனற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் நவீன். இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நவீன் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது காதலி செய்தி வாசிப்பாளரான கண்மணி மற்றும் தனது அம்மாவுடன் எடுத்தக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவியது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் கண்மணியை நவீன் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தற்போது இவர்களின் ஹனிமூன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே நவீனின் பிறந்தநாள் வந்ததையடுத்து, அவருக்கு கேக் வெட்டி ஆச்சரியத்தை அளித்த கண்மணி, மெழுகுவர்த்தி ஒளியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ததால், காதல் ஜோடி கொண்டாட கூடுதல் காரணம் இருந்தது.
மேலும் இந்த கொண்டாட்டத்தில் கண்மணிக்கு நவீன் முத்தம் கொடுத்து ஆச்சரியப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பான அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார், அது தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“