2 மாதத்தில் உடல் எடை குறைத்த ஆல்யா : சஞ்சீவ என்ன பண்ணிருக்கார் தெரியுமா?

2-வது பிரசவத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடிய ஆல்யா மானசா, எடையை குறைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்துள்ளார்.

2-வது பிரசவத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடிய ஆல்யா மானசா, எடையை குறைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Alya

ஆல்யா மானசா

சின்னத்திரையின் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. விஜய் டிவியின் ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் அந்த சீரியலில் நாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததது.

Advertisment

சின்னத்திரையில், ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா 2-வது பிரசவத்தின் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஆல்யா மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க தயாராகி வருகிறார். அவர் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிப்பாரா அல்லது வேறு டிவி சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

இதனிடையே, 2-வது பிரசவத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடிய ஆல்யா மானசா, எடையை குறைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்துள்ளார். இதில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அவர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்ததில் 10 கிலோவுக்கு மேல் குறைத்துள்ளாராம். இதற்காக மிகவும் கஷ்டப்பட்ட தனது மனைவிக்கு சஞ்சீவ் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சீவ் 2 மாதத்தில் 10 கிலோ எடை குறைத்த மனைவிக்கு ஒரு சின்ன பரிசு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Alya Manasa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: