Advertisment

தந்தை மகன் மேஜிக்கல் பாண்ட்... மகனுடன் போட்டோ வெளியிட்ட பிரபல சீரியல் நாயகன்

ரோஜா மற்றும் அர்ஜூன் கேரக்டர்களுக்கு இடையில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

author-image
WebDesk
New Update
தந்தை மகன் மேஜிக்கல் பாண்ட்...  மகனுடன் போட்டோ வெளியிட்ட பிரபல சீரியல் நாயகன்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சீரியகளில் ரோஜா சீரியலுக்கு முக்கிய பங்கு உண்டு. சிபு சூரியன் பிரியங்கா நல்காரி, வடிவுக்கரசி,ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரோஜா மற்றும் அர்ஜூன் கேரக்டர்களுக்கு இடையில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Advertisment

மேலும் 1000 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில். அர்ஜூனாக நடித்து வரும் சிபு சூரியனுக்கு பெண் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளது. அதேபோல் சீரியலின் கதையும் போர் அடிக்காமல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

மேலும் ரோஜா சீரியலுக்காக 2 முறை விருது பெற்றுள்ள சிபு சூரியன், சமீபத்தில் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் ரோஜா சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில், தற்போது சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருப்பதால், அதைப்பற்றி சிந்திக்காமல் இருக்கின்றனர்.

இந்நிலையில், ரோஜா சீரியலின் நாயகி பிரியங்காவும் சிபு சூரியனும் காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், கடந்த ஆண்டு தனது வீட்டில் பார்த்த பெண்னை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில். சிபு சூரியன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்தார்.

தற்போது முதல்முறையாக மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மகன் தனது கையை பிடித்திருக்கும் படி வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில், நாம் ஒன்றாக இணைந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும் தந்தை மகன் மேஜிக்கல் பாண்ட் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இதை பார்த்த ரசிகர்கள் அப்படத்திற்கு லைக்ஸை குவித்து வரும் நிலையில், சிபு சூரியனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Sibbu Suryan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment