/indian-express-tamil/media/media_files/4Aj8meAt4FdGWHmiCBjo.jpg)
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான நடிகர் வெற்றி வசந்த், அண்மையில் கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை, திருமண வாழ்க்கை, மற்றும் சீரியல் பயணம் குறித்து மனம் திறந்து பேசினார். குறிப்பாக, தன்னைப் பற்றி பரவி வரும் வதந்திகள் குறித்தும், தனது கடந்த கால சிரமங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலம் பிரபலமான நடிகர் வெற்றி வசந்த் கடந்த நவம்பர் மாதம் சின்னத்திரை நடிகை வைஷ்ணவியை மணந்தார். வைஷ்ணவி ராஜா ராணி 2, பொன்னி சீரியலில் நடித்தவர். இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில் விவாகரத்து என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அவர் தனது நேர்க்காணலில் பதில் அளித்துள்ளார். வெற்றி வசந்த் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரும் உண்மையில் அறியாத நிலையில், யூடியூப் சேனல்கள் கிளிக் மற்றும் வருவாய்க்காக வதந்திகளைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டார்.
"விஜய் சேதுபதிக்கு வில்லன், சொகுசு பங்களாவில் வாழ்க்கை, விவாகரத்து" என பல பொய்யான தலைப்புகளைச் சுட்டிக்காட்டி, இவை அனைத்தும் உண்மையற்றவை என்பதைத் தெளிவுபடுத்தினார். இந்த வதந்திகள் தன்னை விடவும் தனது பெற்றோர்கள், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு மிகுந்த கவலைகளை ஏற்படுத்துவதாக அவர் வேதனைப்பட்டார். இருப்பினும், நடிகராக இருக்கும்போது இதுபோன்ற வதந்திகளையும், மக்களின் அன்பையும் ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார். மேலும், தனது மனைவி இதுபோன்ற வதந்திகளைப் பார்த்து சிரித்துவிடுவார் என்றும், அதனால் அது தன்னை அவ்வளவாகப் பாதிப்பதில்லை என்றும் கூறினார்.
தனது ஆரம்பக் கால வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிப் பேசுகையில், அவர் மாதம் ரூ. 2,000 வாடகை மட்டுமே இருந்த ஒரு வீட்டில் ஒரு வருடம் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டதாகத் தெரிவித்தார். அந்த கடினமான சூழலில் அவருக்கு உதவிய வீட்டு உரிமையாளருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அந்தச் சமயத்தில் தான் பட்ட கஷ்டங்களை இப்போது நினைத்துப் பார்த்தால் அது மகிழ்ச்சியைத் தாண்டி ஒருவித நன்றிக்கடனை உணர்த்துவதாகவும் அவர் நெகிழ்ந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.