கலர்ஸ் சீரியல் முடிவு... இறுதிக்கட்டத்தில் ஜீ தமிழ் சீரியல் : நடிகருக்கு இரட்டை செக்

தங்களுக்கு பிடித்த சீரியலில் முடிந்தாலோ அல்லது தங்களது பேவரெட் நடிகர் நடிக்கும் சீரியல் முடிவடைந்தாலோ ரசிகர்கள் ரசிகர்கள் வருத்தப்படுவது வழக்கம்.

தங்களுக்கு பிடித்த சீரியலில் முடிந்தாலோ அல்லது தங்களது பேவரெட் நடிகர் நடிக்கும் சீரியல் முடிவடைந்தாலோ ரசிகர்கள் ரசிகர்கள் வருத்தப்படுவது வழக்கம்.

author-image
WebDesk
New Update
கலர்ஸ் சீரியல் முடிவு... இறுதிக்கட்டத்தில் ஜீ தமிழ் சீரியல் : நடிகருக்கு இரட்டை செக்

சின்னத்திரை நிகழ்ச்சியில் தற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அதேபோல் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் பலரும் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Advertisment

சினிமா நட்சத்திரங்களை விட சீரியல் நடிகர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் இந்த காலகட்டத்தில், தங்களுக்கு பிடித்த சீரியலில் முடிந்தாலோ அல்லது தங்களது பேவரெட் நடிகர் நடிக்கும் சீரியல் முடிவடைந்தாலோ ரசிகர்கள் ரசிகர்கள் வருத்தப்படுவது வழக்கம். மீண்டும் அந்த நடிகர் எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள்.

அந்த வகையில் தற்போது சத்யா சீரியல் நாயகன் விஷ்ணுவை நினைத்து ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகரான வளர்ந்துள்ள விஷ்ணு, ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில் சத்யா ரோலில் நடித்து வந்த ஆய்ஷா மற்றும் விஷ்ணு ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம்.

publive-image
Advertisment
Advertisements

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யா சீரியல் முடிவடைந்தவிட்ட நிலையில், தற்போது இந்த சீரியலின் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசன் போலவே இந்த 2-வது சீசனும் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சமீபா காலமாக தமிழில் வெளியான ஹிட் படங்களின் காட்சிகளை அப்படியே ரீகிரியேட் செய்ததால் டிஆர்பியில் பலத்த வீழ்ச்சியை சந்தித்து.

இதனிடையே சத்யா 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கதைப்படி ரவுடி பேபி சத்யா தற்போது கர்ப்பமாக இருக்குமு் நிலையில், இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ள நிலையில், ஏற்கனவே விஷ்ணு கலர்ஸ் தமிழ் சேனலில் வந்த இது சொல்ல மறந்த கதை தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது.

தான் நடித்து வந்த இரண்டு சீரியலும் ஒரே நேரத்தில் முடிவுக்கு வர உள்ளது நடிகர் விஷ்ணுவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6-ல் விஷ்ணு பங்கேற்க உள்ளதாகவும் அதனால் இந்த சீரியல்கள் திடீரேன நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil Sathya Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: