திருமணமான இரண்டு மாதங்களில் ஏன் பிரிந்தோம் என்பது குறித்து பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரஜினி’, ‘கோகுலத்தில் சீதை’, என்றென்றும் புன்னகை’, சிப்பிக்குள் முத்து’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணுகாந்த். இவர் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடிக்கும் போது அவருடன் நடித்த சம்யுக்தா மீது காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் குறித்து குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
விஷ்ணு-சம்யுக்தா திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்திச் சென்றனர். இதனிடையே திருமணம் நடந்து 2 மாதங்களில் விஷ்ணு – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், திருமணத்தின் போது ஜோடியாக எடுத்துப் பகிர்ந்திருந்த புகைப்படங்களையும் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து நீக்கிவிட்டனர்.
இதனிடையே பிரிவு குறித்து நடிகர் விஷ்ணுகாந்த் அளித்த பேட்டியில்,
எங்களது பிரிவுக்கு முக்கிய காரணம் அவரது அப்பாதான். கல்யாணத்திற்கு முன்பு தனக்கு அப்பா இல்லை. எங்களை விட்டு விட்டு வேறு கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டார். எங்கள் அம்மாவும் என்னை சரியாக கவனிப்பதில்லை என்று கூறியிருந்தார். அது அவர்களது தனிப்பட்ட விஷயம் என்று கூறி நாங்கள் இருவரும் பழகி வந்தோம். அதன்பிறகு காதல் ஏற்பட்டு நான் அவரிடம் சொல்லி வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம்.
திருமணமாகி 15 நாட்கள் மட்டுமே சம்யுக்தா என்னுடன் இருந்தார். எங்கள் திருமணத்திற்கு முன்பு இல்லாத அப்பா மீண்டும் அவரது வாழக்கையில் வந்தார். அவரது பேச்சை கேட்டுதான் சம்யுக்தா இப்படி நடந்துகொண்டார். என்னை பற்றி மறைமுகமாக இன்டா பக்கத்தில் பதிவிடுவார். இது குறித்து கேட்டால் உங்கள் பெயரை சொல்லி நான் பதிவிடவில்லையே என்று சொல்வார். அவர் ப்ரண்டுடன் பேசிக்கொண்டிருப்பார். எனக்கு பிடிக்கவில்லை பேசாதே என்று சொன்னேன்.
ஆனால் அவர் அதெல்லாம் முடியாது நான் பேசுவேன் என்று சொன்னார். அப்போ அவர் பார்க்க வேண்டும் வா என்று சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டபோது போவேன் எங்க அம்மாவை கூட்டிக்கிட்டு போவேன் என்று சொன்னார். அதன்பிறகு நான் முக்கியமாக அந்த ப்ரண்டு முக்கியமாக என்று கேட்க அது எனக்கு தெரியாது என்று சொன்னார். அதேபோல் ஒரு பெ்ணணின் அப்பா எப்படியெல்லாம் பேச கூடாதோ அப்படியெல்லாம் அவரின் அப்பா பேசினார்.
சம்யுக்தா என்னுடன் இருந்த 15 நாட்களில் தினமும் அவரது அப்பா வீட்டுக்கு வருவார் சம்யுக்தாவை மட்டும் தனியாக அழைத்து சென்று பேசுவார். இவ்வளவு நாள் இல்லாத அப்பா இப்போது வந்துவிட்டார். அவர் தினமும் வீட்டுக்கு வந்தால் புதிதாக திருமணமாக எங்களுக்கு ஒரு பிரைவசி வேண்டாமா? இது பற்றி அவரிடம் கேட்டபோது எங்க அப்பா இப்போதான் வருகிறார் என்று சொன்னார்.
அதன்பிறகு உங்க அப்பாவை வீட்டுக்குள்ளே விட மாட்டேன் கல்யாணத்திற்கு கூப்பிடவே மாட்டேன் என்று சொன்ன. இப்போது எப்படி இப்படியெல்லாம் வருகிறார் என்று நான் கேட்டேன். அவர் இப்போதான் எங்களுடன் இருக்கிறார் என்று சொன்னார். இது எனக்கு சரியா தோணல என்று சொல்லும்போது அதற்கு கோவிச்சிக்கிட்டார். அதன்பிறகு எங்களிடம் பேச வந்த அவரது அப்பாவிடம் இது பற்றி நான் கேட்டேன்.
அப்போது அவர் இது நான் பார்த்து வைத்த திருமணம் இல்லை என்று பதில் சொன்னார். அப்புறம் எதுக்கு சார் என்னை அவ்வளவு கேள்வி கேட்டீங்க என்று நான் கேட்டேன். அதற்கு அவர் டாபிக்கை மாற்றி பேசினார். நான் எனது நண்பர்கள் சிலரை கூப்பிட்டபோது கண்டவங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது நீ கௌம்புமா என்று அழைத்து சென்றுவிட்டார் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“