சீரியல் நட்சத்திரம் சம்யுக்தா விஷ்ணுகாந்த் இடையேயான விவாகரத்து அதன்பிறகு நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது சம்யுக்தாவின் கேள்விகளுக்கு விஷ்ணுகாந்த் பதில் அளித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், சம்யுக்தாவின் சித்தியை நான் மிரட்டியதாக கூறுகிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கு என்னிடம் ப்ரூப் உள்ளது. என்று ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், பேசும் ஒருவர் நீங்கள் எதற்காக இப்படி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க, நான் இப்போவும் சம்யுக்தாவின் லைஃப் வீணாகிவிட கூடாது என்பதற்காக தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு முறை சம்யுக்தாவின் ஃபேமிலியும் என் ஃபேமிலியும் ஒன்றாக சந்திக்க வையுங்கள் அப்போது நான் சம்யுக்தாவிடம் கேட்க வேண்டும். நான் இப்படி எல்லம் செய்தேன் என்று சொல்கிறாயே சம்யுக்தா இதெல்லாம் என்ன என்று கேட்பதாக கூறுகிறார். அதற்கு அந்த பெண் நாம லீகலாக போய்விடலாம். சம்யுக்தா நல்லாருக்கனும்னு நினைத்தால் நாம லீகலாதான் போகனும் என்று சொல்கிறார்.
மேலும் நீங்கள் இருவருமே உங்களது ப்ரபஷனை பார்க்க வேண்டும் என்று சொல்ல அதுக்குதான் நானும் சொல்கிறேன். ஆனால் அவர் என்னை மாதிரி டீசன்டாக இன்டர்வியூ கொடுத்திருக்க வேண்டும். இந்த இன்டர்வியூவை பார்த்தால் தான் தெரியும். அந்த வீடியோவை பார்த்த அனைவரும் அந்த பெண் இவ்வளவு பண்ணிருக்கா ஆனா அந்த பொண்ணுக்கு நீ சப்போர்ட் பண்ணி அமைதியா இருக்கியே என்று கேட்கிறார்கள்.
ஆனால் நான் இப்போவும் சொல்கிறேன் சம்யுக்தாவுக்காகத்தான் இப்போவும் பேசுகிறேன். அவ எனக்கு வேணும் அப்படினு பேசல அவ .ஃலைப்புக்காகத்தான் பேசுகிறேன். அதற்கு அந்த பெண் விட்டுங்க ஃலைப் பாருங்க என்று சொல்லும்போது அப்படியெல்லம் விட முடியாது என்று சொல்லும் விஷ்ணுகாந்த் என்னிடம் ப்ரபோஸ் செய்துவிட்டு அதை ரிவீல் செய்யுற வரைக்கும் ஒருத்தரிடம் பேசிக்கிட்டு இருக்கியே அதை நீயே உன் வாயால் சொல்லிவிடு என்பதுடன் அந்த ஆடியோ முடிவடைகிறது.
நான் அவர் சித்திக்கிட்ட இதைத் தான் பேசினேன். நான் அவரை மிரட்டவில்லை. அவரிடம் கேட்ட ஒரு விஷயம் இப்பவாது நீங்க உங்க ஃபேமிலியோட வந்து பேசுங்க என்றுதான் சொன்னேன் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“