'16 வயசுல எனக்கே தெரியாம என்னை கவர்ச்சியா நடிக்க வச்சுட்டாங்க; இன்னும் அந்தக் காட்சியை நான் பார்க்கலை' சிரிப்பு நடிகை பிரியங்கா சோகம்

வெள்ளித்திரையில் காமெடி ரோலில் நடிக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. அவரது வாழ்க்கையின் சோகமான பக்கத்தை பற்றி பேசியுள்ளார்.

வெள்ளித்திரையில் காமெடி ரோலில் நடிக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. அவரது வாழ்க்கையின் சோகமான பக்கத்தை பற்றி பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-10 165907

பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து ஆல்டைம் பேவரைட் காமெடி சீன்களில் நடித்துள்ளார் இவர். அர்ஜூன் மற்றும் வடிவேலு கூட்டணியில் வந்த மருதமலை படத்தில் வடிவேலு காமெடி அனைத்தும் டிரேட்மார்ட் ஹைலைட்டாக இருக்கும். 

Advertisment

அந்தப் படத்தின் வெற்றிக்கே காமெடி தான் முக்கிய காரணமாக இருந்தது. அந்தப் படத்தில் வரும் காமெடிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், போலீஸாக இருக்கும் வடிவேலுவிடம் பிரியாங்கா பிராது கொடுக்க வரும் காமெடி தான்.

5 கணவர்களும் வரிசையாக வந்து பிரியங்காவின் கணவராக வடிவேலுவிடம் அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவரும் பிரியங்காவை தன்னுடன் அனுப்புமாறு கேட்பார்கள். கடைசியில் சீட்டு குலுக்கிப் போட்டு ஒரு கணவருடன் அனுப்பி வைப்பார். 

அடுத்தது, காதல் கடிதம் படத்தில் ’கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’ என்ற ஈவ்டீசிங் காமெடியில் மாறுவேடத்தில் இருக்கும் போலீஸாக நடித்திருந்தார். 

Advertisment
Advertisements

அரசு படத்தில் ’பத்துமாமி’ காமெடியிலும் நடித்திருப்பார். இப்படி பல ஆல்டைம் பேவரைட் காமெடிகளில் நடித்துக் கொண்டிருந்த அவர் திடீரென வெள்ளித்திரையில் இருந்து திடீரென காணாமல் போனார்.

இப்போது 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். திருமணம் ஆன போது கணவர் வேண்டாம் என்று கூறியதால் நடிப்பை நிறுத்திய அவர் இப்போது சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். 

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் பயணித்த ஒரு சமீபத்திய நேர்காணலில் அவரது மோசமான ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

முதலில் இவர் சினிமாவில் நுழையும் போது கிளாமர் கதாபாத்திரங்கள் மட்டுமே கொடுத்தார்களாம், அனால் அதை ஷூட்டிங் முன்பு சொல்ல மாட்டார்களாம். "எனக்கே தெரியாது அது அப்படி பட்ட ரோல் தான் என்று. நான் அந்த படங்களை பார்க்கவே மாட்டேன். எனக்கு மனசே வராது" என்று ஒரு மெல்லிய சிரிப்புடனேயே கூறியுள்ளார். 

அவரது சம்பளம் குறித்து பேசியபோது "அந்த நாட்களில் ஒரு நாளைக்கு 1000 அல்லது 1500 ருபாய் தான் சம்பளமாக தருவார்கள். அதற்கும் ஜாலியாக பிரிஎண்ட்ஸ் கூடவே போவேன்" என்று புன்னைகையுடன் கலகலப்பாக கூறியுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ சீரியலில் வில்லியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, சினிமாவில் நடிப்பதும் சின்னத்திரையில் நடிப்பதும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், வெள்ளித்திரையில் நான் காமெடி ரோலில் நடித்தேன். சின்னத்திரையில் வில்லியாக நடிக்கிறேன். இது மட்டும் தான் வித்தியாசம். 

முதலில் வடிவேலு சாரைக்கூட எனக்கு தெரியாது. யாருடன் நடிக்கிறேன் என்பது தெரியாமலேயே அவருடன் காமெடி சீன்களில் நடித்திருக்கிறேன். பின்னர் தான் அவர் யார் என தெரிந்து கொண்டேன் என கலகலப்பாக கூறியுள்ளார். 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: