விஜய் டிவி நடிகைக்கு பூச்சூட்டல் விழா: க்யூட் போட்டோஸ்

Serial actress Actress Sridevi Ashok celebrating her birthday and wedding anniversary Tamil News: சின்னத்திரையில் தொடர்களில் கலக்கி வரும் நடிகை ஸ்ரீதேவி அசோக், தனது பிறந்த நாள் மற்றும் திருமண நாளை குடுத்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Serial actress Actress Sridevi Ashok Tamil News: Sridevi Ashok celebrating her birthday and wedding anniversary

 Serial actress Actress Sridevi Ashok Tamil News:  நடிகர் தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகை ஸ்ரீதேவி அசோக், ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி, நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

அசோக் சின்தலா என்பவரை காதலித்து மணம் முடித்த ஸ்ரீதேவி, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அறிவித்தார். அப்போது அவர் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே லைக்ஸ்களும், வாழ்த்துக்களும் குவிந்தன. மேலும் அவரது ரசிகர்களால் இணைய பக்கங்களில் பெரிதும் பகிரப்பட்டு வைரலாகின.

நடிகை ஸ்ரீதேவி அசோக்

இந்த நிலையில், தனது முதல் குழந்தையை மிக விரைவில் எதிர்பார்த்துள்ள நடிகை ஸ்ரீதேவி அசோக், தனது பிறந்த நாள் மற்றும் திருமண நாளை குடுத்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டும் உள்ளார்.

“எனது குடும்பத்தினருடன் வீட்டில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டம். குழந்தையை விரைவில் வீட்டிற்கு வரவேற்க, உங்கள் அனைவரும் போலவே நானும் உற்சாகமாக இருக்கிறேன். உங்கள் விருப்பங்களுக்கும் கவனிப்புக்கும் நன்றி மற்றும் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். பாதுகாப்பாக இருங்கள், பாதுகாப்பாக மகிழ்ச்சியாக இருங்கள், நேர்மறை எண்ணங்களோடு இருங்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களும் ஸ்ரீதேவி தனது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்து ஏராளமான வாழ்த்துக்களைப் பெற்றுள்ளார். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பூச்சூட்டல் விழாவை சுருக்கமாக கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress actress sridevi ashok tamil news sridevi ashok celebrating her birthday and wedding anniversary

Next Story
இந்த ஜோடி நம்ம லிஸ்ட்ல இல்லையே… பிக் பாஸ் டீமுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ராஜமாதா!Bigg Boss jodigal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com