scorecardresearch

பிரபல சீரியல் நடிகை வீட்டில் சிறப்பு விஷேஷம்…. ரசிகர்கள் வாழ்த்து மழை

Sridevi Ashok’S baby shower viral pics Tamil News: முதல் குழந்தையை மிக விரைவில் எதிர்பார்த்துள்ள நடிகை ஸ்ரீதேவி அசோக், தனக்கு குடும்பத்தினர் நடத்திய வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Serial actress Actress Sridevi Ashok Tamil News: Sridevi Ashok’S baby shower pics goes viral

Serial actress Actress Sridevi Ashok Tamil News: சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால் இவர் நடிகர் தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதனபின்னர், ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி, நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவி, அசோக் சின்தலா என்பவரை காதலித்து மணம் முடித்தார். இவர் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கடந்த காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14-ம் தேதி) வெளியுலகிற்கு அறிவித்தார். அப்போது அவர் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே லைக்ஸ்களும், வாழ்த்துக்களும் குவிந்தன. மேலும் அந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் இணைய பக்கங்களில் பெரிதும் பகிரப்பட்டு வைரலாகின.

மேலும் இவர், தனது பிறந்த நாள் மற்றும் திருமண நாளை குடுத்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதன் கேப்ஷனில் “எனது குடும்பத்தினருடன் வீட்டில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டம். குழந்தையை விரைவில் வீட்டிற்கு வரவேற்க, உங்கள் அனைவரும் போலவே நானும் உற்சாகமாக இருக்கிறேன். உங்கள் விருப்பங்களுக்கும் கவனிப்புக்கும் நன்றி மற்றும் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். பாதுகாப்பாக இருங்கள், பாதுகாப்பாக மகிழ்ச்சியாக இருங்கள், நேர்மறை எண்ணங்களோடு இருங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகைப்பட பதிவிற்கு நடிகை ஸ்ரீதேவி தனது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்து ஏராளமான வாழ்த்துக்களைப் பெற்றார். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பூச்சூட்டல் விழாவை சுருக்கமாக கொண்டாடிய அந்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

இப்படி தனது புகை படங்களையும், வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் தவறாமல் பகிர்ந்து வரும் நடிகை ஸ்ரீதேவி, இந்த முறை அவரது வளைகாப்பு படங்களை பகிர்ந்துள்ளார். இந்த ஏற்பாடு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக திட்டமிடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Serial actress actress sridevi ashok tamil news sridevi ashoks baby shower pics goes viral