Advertisment

திருமாவளவன் உடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சீரியல் நடிகை; அவதூறு பேசிய நெட்டிசன்களுக்கு அறிவுரை

திருமாவளவன் உடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள், வீடியோ குறித்து சில நெட்டிசன்கள் அவதூறாக கம்மெண்ட் செய்ததை அடுத்து, நடிகை அகிலா, எல்லாவற்றிலும் அரசியல் செய்யாதீர்கள் என்று நெட்டிசன்களுக்கு அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
serial actress akila and thirumavalavan

எல்லாவற்றிலும் அரசியல் செய்யாதீர்கள் என்று நெட்டிசன்களுக்கு அறிவுரை கூறி நடிகை அகிலா வீடியோ வெளியிட்டுள்ளார்.

வி.சி.க தலைவர் திருமாவளவன் உடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள், வீடியோ குறித்து சில நெட்டிசன்கள் அவதூறாக கம்மெண்ட் செய்ததை அடுத்து, நடிகை அகிலா, எல்லாவற்றிலும் அரசியல் செய்யாதீர்கள் என்று நெட்டிசன்களுக்கு அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisment

வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி, டிசம்பர் 10-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் புதியதாக கட்டப்பட்ட தனியார் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை சீரியல் நடிகை அகிலா தொகுத்து வழங்கினார்.

வி.சி.க. தலைவர் திருமாவளவன் அந்த மேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, மேடையில் அகிலா பேசிக் கொண்டிருந்தார். அந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் சிலர் அவதூறாக சித்தரித்து, சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் கம்மெண்ட் செய்து வைரலாக்கியதைத் தொடர்ந்து, நடிகை அகிலா, இது போல வக்கிரபுத்தி உடைய நெட்டிசன்களுக்கு அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், சிலர் நடிகை அகிலா வி.சி.க-வில் சேர்ந்துள்ளாரா என்ற கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.



 

இதுதொடர்பாக, நடிகை அகிலா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: “உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் நான் சிறப்பு விருந்தினர் மற்றும் தொகுப்பாளராக சென்றிருந்தேன். அந்த மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக வந்து தனது கரங்களால் திறந்து வைத்தவர் தோழர் அண்ணன் திருமாவளவன்.

அந்த வீடியோ ட்ரெண்டானதில், அவரை நான் ஒரு வரவேற்புரை அளித்து பேச அழைத்தேன். சிறப்பு விருந்தினர் அமர்ந்திருக்க வேண்டும். நான் அழைத்த பிறகு அவர் வர வேண்டும் என்பது நெறிமுறை. ஆனால், கட்சி நபர்கள் அவருக்கு மாலை அணிவிப்பது, நடுவே அழைப்பு என அவசரம், அவசரமாக இருந்தது. அதனால் அவரை பேச அழைக்க வேண்டும். அதற்காக அவரை அப்படியே கூப்பிட முடியாது. அவர் ஒரு பெரிய தலைவர். முக்கியமாக மனித உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும், சமதர்மத்திற்காகவும் இப்போது போராடும் மாமனிதர். தற்போது மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

அவரை நான் திருமாவளவன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் என்று கூறினால் நன்றாக இருக்காது என்பதால், அழகான உரையை தயார் செய்து நான் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் நான் என்ன பேசுகிறேன் என்று உற்று கவனித்துக் கொண்டிருந்தார். அதை வேறு விதமாக ட்ரோல் செய்து அவரை களங்கப்படுத்தும் விதத்தில் நிறைய ட்ரோல் செய்வதை பார்க்கும்போது மனசு கஷ்டமாக இருந்தது.

இந்த மாதிரி விஷயங்களை பரப்புவதற்கு பதிலாக அவர் சொல்லும் நல்ல விஷயங்களை, இவர் மட்டுமின்றி எந்த பிரபலமாக இருந்தாலும் நல்ல விஷயங்களை பரப்பலாமே. தேவையில்லாமல் இதுபோன்று செய்யத் தேவையில்லை. இந்த சில நொடிகள் வீடியோவை பார்த்தவர்கள் என் உடை கலரை வைத்து நான் வி.சி.க.வில் சேர்ந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி எல்லாம் கிடையாது. அந்த நிகழ்ச்சியில்தான் நாங்கள் மேடையில் சந்தித்துக் கொண்டோம்.

மற்றபடி நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, அரசியலில் நான் இப்போது வரை இல்லை. நிகழ்ச்சிகளில் வரும்போது நீங்கள் ஒரு ஆணை அசிங்கப்படுத்தும்போது, அவனுடன் இருக்கும் பெண்ணின் மாண்புக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக செயலை செய்கிறீர்கள் என்பதை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படி செய்வதால் அந்த மனிதநேயம், அந்த பெண்ணையும் நீங்கள் அசிங்கப்படுத்துறீங்க என்று அர்த்தம் கிடையாது. உங்களுக்குள் இருக்கும் வக்கிரபுத்தி வெளிப்படுகிறது. நீங்கள் யார் என்று தெரிகிறது.

"மற்றவர்களிடம் எந்த குறை இருந்தாலும், நல்ல விஷயம் இருந்தால் அதை விட்ரனும். தேடி எடுத்தாலும் எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத ஒரு மனிதர் மேல கொள்கை ரீதியாக எதிர்க்க முடியாத ஒரு மனிதர் மீது நீங்கள் குணாதிசய தாக்குதல் நடத்துவது மேடையில் இருக்கும் பெண்களையும் களங்கப்படுத்துவது ஆகும்.

நீங்கள் களங்கப்படுத்துவது யாரோ ஒரு வீட்டு பெண் மட்டும் கிடையாது. உங்கள் வீட்டு பெண்ணும் இருக்கிறார்கள். எந்த பெண்ணாக இருந்தாலும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும். உண்மையை உள்ளதை உள்ளபடியே மக்களுக்கு கடத்த பாருங்கள். இதுக்கு பிறகு இப்படி செய்யமாட்டீங்க என்று நம்புகிறேன்.” என்று நடிகை அகிலா கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment