Serial Actress Alya Manasa New Photoshoot Update In tamil ஆல்யா மானசா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? கவனம் ஈர்க்கும் போட்டோஷூட் | Indian Express Tamil

ஆல்யா மானசா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? கவனம் ஈர்க்கும் போட்டோஷூட்

குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில். ஆல்யா எப்போது சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆல்யா மானசா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? கவனம் ஈர்க்கும் போட்டோஷூட்

சின்னத்திரையில் நட்சத்திர காதல் தம்பதிகளாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் ஆல்யா மானசா. விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் அறிமுகமாக ஆல்யா அந்த சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், ராஜா ராணி சீரியலில் 2-வது சீசனில் நடித்து வந்த ஆல்யா மீண்டும் கர்ப்பமானார்.

தொடர்ந்து தனது 9-வது மாதம் வரை அந்த சீரியலில் தொடர்ந்து நடித்த அவர், பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் இருந்து விலகியது அனைவரும் அறிந்த ஒன்று.

தொடர்ந்து அவருக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு அர்ஷ் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில். ஆல்யா எப்போது சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதே சமயம் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் இணைப்பில் உள்ள ஆல்யா அவ்வப்போது அழகு சாதன பொருட்கள் தொடர்பான விளம்பரம் குழந்தையுடன் விளையாடும் வீடியோ என வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூ்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. சுடிதாரை விளம்பரப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோஷூட் ரசிகர்கள வெகுவாக கவர்ந்துள்ளது.

குழந்தை பிறந்து தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகிவிட்ட ஆல்யா மானசா சன்.டி.வி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்திருந்த ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நடித்து வரும் நிலையில், தற்போது ஆல்யாவும் சன்டிவி சீரியலில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Serial actress alya manasa new photoshoot update in tamil