பிரசவத்தின் காரணமாக விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய நடிகை ஆல்யா மானசா தற்போது சன்டிவியின் புதிய சீரியலில் களமி றங்க உள்ளார்.
சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி தொடரின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அந்த சீரியலில் நாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததது.
முதல் பிரசவத்திற்கு பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா 2-வது பிரசவத்தின் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனிடையே சில மாதங்களுக்கு முன் ஆல்யா மானசாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க தயாராகி வருகிறார்.
மேலும் அவர் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிப்பாரா அல்லது வேறு டிவி சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் சன்டிவியின் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரக்கும் புதிய சீரியலில் ஆல்யா மானசா லீடு ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே தற்போது ஆல்யா மானசா நடிப்பில் வெளியாக உள்ள புதிய சீரியலின் ப்ரமோ சன்டிவியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இனியா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த சீரியலின் ப்ரமோவில், சிறுவர்களுடன் ஆடிப்படும் ஆல்யா கலகலப்பாக இருக்கிறார். அதே சமயம் சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவல் இன்றும் வெளியாகவில்லை
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த ஆல்யாவின் கணவர் தற்போது சன்.டிவியின் கயல் சீரியலில் நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் கயல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நிலையில், தற்போது கணவருக்கு போட்டியாக ஆல்யா சன்டிவி சீரியலில் கமிட் ஆகியுள்ளது இருவருக்கும் இடையே டிஆர்பி ரேட்டிங்கில் மோதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“