/tamil-ie/media/media_files/uploads/2022/06/Alya-Manasa.jpg)
சின்னத்திரையின் முன்னணி நடிகையான ஆல்யா மானசா கணவர் சஞ்சீவின் கயல் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ள புகைப்படம் இணயத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்த ஆல்யா தனது வீட்டை மீறி சஞ்சீவை திருமணம் செய்துகொண்டார். சின்னத்திரையில் நட்சத்திர தம்பதியாக வலம் வரும் இவர்களுக்கு ஐலா அர்ஷ் என்று 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா 2-வது முறையாக கர்ப்பமானதால் இந்த சீரியலில் இருந்து விலகினார். மேலும் லாக்டவுன் சமயத்தில் யூடியூப் சேனல் தொடங்கி பல வீடியோக்களை வெளியிட்டு வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளார். தற்போது சீரியலில் இருந்து விலகினாலும், வலைதளத்தில் ஆல்யா ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சஞ்சீவ் நடித்து வரும் கயல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஆல்யா தனது மகள் ஐலா பாப்புவுடன் விசிட் அடித்துள்ளார். தற்போது கயல் சீரியலில், கயலின் தங்கை திருமணம் தொடர்பான எபிசோடுகள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஆல்யா அங்கிருந்த நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்தக்கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ஆல்யா நடித்த ராஜா ராணி 2 சீரியலின் ஷூட்டிங்கின்போது சஞ்சீவ் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து ஆல்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இதை தற்போது தொடரும் ஆல்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us