Serial Actress Alya Manasa Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலில் நடிகை ஆல்யா மானசாவும் நடிகர் சஞ்ஜீவும் ஜோடியாக நடித்தனர். இருவரும் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
Advertisment
ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நாயகியாக ஆல்யா மானசா நடிக்கிறார். அவருடைய கணவர் சஞ்ஜீவ் காற்றின்மொழி சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார்.
Advertisment
Advertisements
டிவி சீரியல் ஜோடிகளில் பிரபலமான ஜோடியாக வலம் வரும் ஆல்யா மானசா – சஞ்ஜீவ் ஜோடி சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர்களாக உள்ளனர். சமூகவலைத்தள பக்கங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இவர்கள் தற்போது 'சஞ்ஜீவ் ஆல்யா' என்ற யூடூப் சேனலை நடத்தி வருகின்றனர்.
அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வரும் இவர்கள், சமீபத்தில் 'பிரிட்ஜ் டூர்' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றையே வெளியிட்டு இருந்தனர். இதை பார்த்த நெட்டிசன்கள் வீடியோவில் ஆல்யா பேசும் விதத்தை பற்றி கலாய்த்து வருகின்றனர். 'நீங்க நார்மலா பேசுனாதான் நல்லா இருக்கு, இப்படி கொழந்தை மாதிரி பேசுறதை நிறுத்துங்க' என கமெண்ட் செய்தும் வறுத்தெடுத்தும் வருகின்றனர். அதோடு சிலர் 'ஷிவாங்கி மாதிரி பேச ட்ரை பண்ணாதீங்க' என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.