scorecardresearch

நாங்கள் இப்போது நான்கு பேர்… நல்ல செய்தி சொன்ன பிரபல நடிகை

நடிகைகள் சிலர் தங்களது தனிப்பட்ட வாழ்வின் முக்கிய அம்சங்களை் குறித்த பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர்.

நாங்கள் இப்போது நான்கு பேர்… நல்ல செய்தி சொன்ன பிரபல நடிகை

சின்னத்திரையில், வரும் நிகழ்ச்சிகள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர். இதில் குறிப்பாக நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாககும் வகையில் தங்களது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்

இதில் பெரும்பாலும் நடிகைகள் தங்களது சுற்றுலா மற்றும் போட்டோஷூட் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், சிலர் தங்களது தனிப்பட்ட வாழ்வின் முக்கிய அம்சங்களை் குறித்த பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை ஆனந்தி அஜய் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஆனந்தி. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன், மிஸ்டர் அன்ட் மிஸஸ் கில்லாடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமாக இவர், டாஸ் ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். சீரியல் ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருந்த ஆனந்தி கடந்த 2017-ம் ஆண்டு அஜய் என்பரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஆனந்தி, தாரைதப்பட்டை, ரௌத்திரம், வாலு மிகாமன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துளளார். மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆனந்தி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவில். தான் 2-வதாக கர்ப்பமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Serial actress anandhi ajay say good news in her instagram post viral