சின்னத்திரையில் சத்யா சீரியல் நடிகை ஆயிஷாவுக்கு திருமணம் முடிந்துள்ளதாக வெளியான தகவல் தற்போது இணையத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
சின்னத்திரையின் டாம்பாய் என்றதும் டக்கென்று நினைவுக்கு வருபவர் நடிகை ஆயிஷா. ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ள இவர், அந்த சீரியலில் ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யா சீரியல் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது அந்த சீரியலின் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசன் போலவே 2-வது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவ்வப்போது பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. தெறி படையப்பா உள்ளிட்ட பட காட்சிகளை சீரியலில் வைத்து மாஸ் அசத்தியவர் ஆயிஷா.
தமிழ் மட்டுமல்லாது மற்றமொழி சீரியலிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஆயிஷா அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் இவருக்கான ரசகர்கள் பட்டாளமும் அதிகமாக உள்ள நிலையில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆயிஷா சமீப நாட்களாக தான் வெளியிடும் புகைப்படங்களில் நெற்றியில் குங்குமம் வைத்து இருப்பது போன்று வெளியிட்டு வருகிறார். இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆயிஷாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே சமயம் சில ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆயிஷா, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது வெறும் போட்டோஷூட் தான் என்று கூறியுள்ளார். ஆனாலும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil