ஜீ தமிழின் யாரடி நீ மோகினி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. முதல் சீரியலிலேயே நெகடீவ் ரோலில் நடித்து அசத்திய இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
Advertisment
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சைத்ரா ரெட்டி, கன்னடாவில் வெளியான அவனு மேட்டே ஷ்ரவாணி என்ற கன்னட சீரியல் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
Advertisment
Advertisements
தொடர்ந்து 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான எனெண்டு ஹெசரிடலி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சைத்ரா, வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது சன்.டி.வியின் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இதில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil