Advertisment

விஜய் டி.வி சீரியல் நடிகை திடீர் வீடியோ: கணவர் மீது ஷாக் புகார்

பிரபல சீரியல் நடிகை திவ்யா தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகர் அர்ணவ் இதற்கு மறுப்பு தெரிவித்திருப்பதோடு, ஆவடி காவல் ஆணையரகத்தில் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Serial actress Divya release video, actress Divya complaints husband arnav, actor arnav, Sevvanthi serial, chellamma serial hero Arnav, husband harassing actress Divya, சீரியல் நடிகை திவ்யா, நடிகை திவ்யா கணவர் மீது புகார், Arnav, Divya, Tamil Serial news

பிரபல சீரியல் நடிகை திவ்யா தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகர் அர்ணவ் இதற்கு மறுப்பு தெரிவித்திருப்பதோடு, ஆவடி காவல் ஆணையரகத்தில் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார்.

Advertisment

பிரபல மலையாள சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் தமிழில்‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். மேலும், 'மகராசி' சீரியலிலும் நடித்துள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் அர்ணவ் என்ற பெயரில் தற்போது விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு சீரியல் நடிகை திவ்யாவுக்கும் நடிகர் அர்ணவுக்கும் காதல் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், நடிகை திவ்யா தனது கணவர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக விடியோ வெளியிட்டதால் சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

சீரியல் நடிகை திவ்யா, கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் இருந்த அர்ணவையும் வீட்டுச் செலவுகளையும் தானே பார்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும், அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அர்ணவ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அர்ணவ், ஆவடி காவல் ஆணையரகத்தில் திவ்யா மீது புகார் கொடுத்துள்ளார்.

அதில், தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார் என்றும் அர்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், திவ்யாவை தான் தாக்கியதாகக் கூறியிருப்பது முற்றிலும் பொய். வீட்டில் தான் இல்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளது. திவ்யா கருவைக் கலைப்பதற்காக நாடகம் ஆடுகிறார். தவறான நண்பர்களின் வழிகாட்டுதலால் திவ்யா புகார் கூறியுள்ளதாக அர்ணவ் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Serial Actress Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment