scorecardresearch

பட்டி, டிங்கரிங் செய்த பங்களா… ப்ரீனா ஆசாத் ஹோம் டூர் வைரல்

சீரியலுக்கு வருவதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த .பரீனா தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்

தமிழகத்தில் தற்போது சினிமா நட்சத்திரங்களை விட சீரியல் நடிகர் நடிகைளுக்கே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதில் பெரும்பாலான சீரியல் நடிகைகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது விறுவிறுப்பான பதிவுகளை வெளியிட்டு தங்களது ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர்.

அவர்கள் வெளியிடும் பதிவுகளை கொரோனாவுக்கு முந்தைய பதிவுகள் மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய பதிவுகள் என இரு வகைகளாக பிரிக்கலாம். கொரோனா லாக்டவுன் காலத்திற்கு முன்பு வெளியில் சென்று வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நடிகைகள் லாக்டவுன் காலத்திற்கு பின் தங்களது பதிவுகளை வீட்டிற்குள் இருந்து பதிவிட தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் பிரிஞ்ச் டூர். ஹோம் டூர் என வீட்டிற்குள் இருக்கும் அனைத்து பொருட்களையும் பற்றி பேசி வீடியோ வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருவதால், சின்னத்திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து அது மாதிரியான பதிவுகளையே வெளியி்ட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை .பரீனா ஆசாத் வெளியிட்டுள்ள ஹோம் டூர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நடிகை ப்ரீனா ஆசாத், அந்த சீரியலின் முதன்மை கேரக்டரான பாரதிக்கு தொல்லை கொடுப்பதும் அவரை திருமணம் செய்ய முயற்சிப்பதும் என பரபரப்பான திருப்பங்களை கொடுத்திருந்தார்.

ஆனால் சமீப காலமாக பாரதி கண்ணம்மா சீரியல் சலிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கியத்துவத்தை இழந்துள்ளது. இதனால் தற்போது ராஜா ராணி சீரியலுடன் மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது சற்று விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே வில்லி வெண்பா ரோலில் நடித்து வரும் ப்ரீனா ஆசாத் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலுக்கு வருவதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த .பரீனா தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவ்வப்போது பல இன்ட்ரஸ்டிங்கான வீடியோக்களை வெளியிட்டு வரும் ப்ரீனா தற்போது ஹோம் டூர் என்ற பெயரில் தனது வீடு பற்றிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். 2 மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Serial actress farina azad home tour vdeo viral on social media