Bharathi kannamma Farina Azad Viral Photo and Video : பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஃபரினா ஆசாத் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், இவர் டானஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. டிஆர்பி ரெட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நாள்தோறும் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை .ஃபரினா ஆசாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் அடுத்த இரு தினங்களில் இவர் தனது வயிற்றில் மருதானியால் கோலமிட்டு போட்டோட்ஷீட் நடத்தி இந்த போட்டோக்களை தனது சமூகவளைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் கர்ப்பமான செய்திக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் பலரும் இந்த போட்டோஷூட்க்கு கடுமையாக விமர்சனங்களை கொடுத்தனர். ஆனாலுமட் ஃபரினா தன்னை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு வந்தார்.
இந்த போட்டோக்களுக்கு விமர்சனம் செய்யும் நெட்டிசன்களுக்கு பதிலடியும் கொடுத்து வந்தார். இதனால் இணையதளம் பெரும் பரபரப்புக்கு உள்ளான நிலையில் கடந்த சில வாரங்களாக ஃபரினா எவ்வித போட்டோ மற்றும் வீடியோவும் வெளியிடாததால் பரபரப்பு அடங்கிப்போனது. ஆனால் தற்போது மேலும் பரபரப்பை அதிகரிக்கும் வகையில் ஃபரினா போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு புகைப்படத்தில் அவர் ரவி வர்மா ஓவியம் போல போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த போட்டோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் நடிகை ரேமா அசோக் உடன் சேர்ந்து தான் அவர் டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வயிற்றில் குழந்தையுடன் இப்படியா ஆடுவது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil