/indian-express-tamil/media/media_files/x3x9rrM9nCYU0nhp5cI1.jpg)
நீயா நானா ப்ரோமோ
நீயா நானா நிகழ்ச்சியில் கர்ப்ப காலத்தை கொண்டாடுபவர்கள் சார்பாக பேசிய நடிகை ஃபரீனாவிடம், எதிர்தரப்பு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்பதாக விஜய் டிவியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளை எடுத்து விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்தநிலையில், மே 26 ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த வார எபிசோடில் கர்ப்ப காலத்தை போட்டோ சூட்டோடு கொண்டாடுபவர்களும் அதை விமர்சிப்பவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சிறப்பு விருந்தினராக சீரியல் நடிகை ஃபரீனா கலந்து கொண்டுள்ளார்.
ப்ரோமோவில், கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுக்கும் போட்டோ சூட் மற்றும் விதவிதமான பெயர்களில் பல பங்க்ஷன்களும் கொண்டாடப்படுவதைக் குறித்து பெண்கள் பேசுகின்றனர். அதற்கு எதிர் தரப்பில் இருக்கும் பெண்கள் இவ்வளவு ஆடம்பரச் செலவு எதற்கு என்கிற வகையில் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பெண் ஒருவர் முதல் மாதத்தில் இருந்து குழந்தை பிறக்கும் மாதம் வரை தனது வயிற்றை போட்டோ எடுத்து ஆல்பம் ஆக போடுவது போன்று வயிற்றை காஸ்டிங் செய்வது குறித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். அதை ஆமோதிக்கும் வகையில் ஃபரீனாவும் முதல் மாதத்தில் என்னுடைய வயிறு எப்படி இருந்தது, இரண்டாவது மாதத்தில் எப்படி இருந்தது என்று மொத்த காஸ்டிங் பார்க்கும் போது எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று பேசினார்.
அப்போது எதிர் தரப்பில் இருந்த பெண் கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்வதை யார் பாக்கணும்? என்று கேட்க, அதற்கு ஃபரீனா நாங்க தான் பாக்கணும் என்று சொல்கிறார். உடனே கேள்வி கேட்ட பெண் அப்போ நீங்க உங்களை போட்டோ எடுத்து நீங்க பாருங்க... ஆனா அதை ஏன் ஊரு பார்க்கணும்? என்ற கேள்வி கேட்கிறார். இவ்வாறாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.