டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. தொடர்ந்து அதில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய அதன் மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சின்னத்திரையின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் கேப்ரியல்லா. டிக்டாக் வீடியோ மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவர், ஐரா படத்தில் இளம்வயது நயன்தாராவாக நடித்து பிரபலமானார்.

அதன்பிறகு என்4 கேடி கருப்புதுரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், சன்டிவியின் சுந்தரி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுமானார். தற்போது இந்த சீரிலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவதை தொடர்ந்து வரும் கேப்ரியல்லா சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இவரின் ஃபாலோயராக இருக்கிறார்.

மேலும் சமூவ வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் கேப்ரியல்லா தற்போது தனது பழைய கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil