Gabriella Sellus Tamil News: சன் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி. கருப்பாக உள்ள கிராமத்து பெண் சுந்தரியை மையமாக கொண்டு கதைமைக்கப்பட்ட இந்த சீரியலில் நடிகை ‘கேப்ரியல்லா செல்லஸ்’ நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது சின்னத்திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், தனது திறமையான நடிப்பு மற்றும் களையான முகத்தோற்றம் போன்றவற்றால் அவருக்கென ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் கேப்ரியல்லா.

சுந்தரி சீரியலில் கணவனுக்காக உருகும் பெண்ணாக நடித்து வரும் சுந்தரி, தற்போது கணவனைப் பற்றிய உண்மைத் தெரிந்து எரிமலையாக பொங்குகிறார். கணவன் கார்த்திக்கை அவர் கேட்கும் ஒவ்வொரு வசனமும் சாட்டையடியாக விழுகிறது. தற்போது இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, சுந்தரி சீரியலில் கருப்பு நிற சுத்த கிராமத்து பெண்ணாக நடித்து வரும் கேப்ரியல்லா தற்போது சீரியலில் புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். தலைமுடி கட் செய்து முகமே வேறொரு நாயகி போல் பார்க்க தெரிகிறது. அவர் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அவரது ரசிர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்தும் வரும் ரசிகர்கள் கேப்ரியல்லாவின் புதிய தோற்றம் மிரட்டலாகவும், அழகாகவும், வேற லெவல் என்றும் கூறியுள்ளார்கள்.
கேப்ரியல்லாவின் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ஒரு ரசிகர் “நீங்க வழக்கம் போல கலக்குங்க சிஸ்டர் என்று கூறி ஃபயர் சிம்பலை பறக்கவிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டா பதிவில் கேப்ரியல்லா, “மாற்றம் தோற்றத்தில் மட்டுமே”…. இதோ உங்கள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரி @சன்டிவி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் வீடியோ ஒன்றையையும் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“