Advertisment

கர்ப்பமாக இருக்கும்போது இப்படி டான்ஸ் ஆடாதம்மா… சீரியல் நடிகைக்கு நெட்டிசன்கள் அட்வைஸ்!

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக இருக்கும்போது ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்த வீடியோவைப் பார்த்த நெட்சன்கள், இந்த நேரத்தில் இப்படி ஆடக்கூடாது என்று அறிவுரை கூறிவருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
serial actress gayathri yuvaraj dance, serial actress gayathri yuvaraj dance in pregnancy time, netizens advice to serial actress gayathri yuvaraj, gayathri yuvaraj, கர்ப்பமாக இருக்கும்போது சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் டான்ஸ், சீரியல் நடிகை சீரியல் நடிகை காயத்ரிக்கு அட்வைஸ், சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், gayathri yuvaraj dance, Tamil tv serial actress

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக இருக்கும்போது ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்த வீடியோவைப் பார்த்த நெட்சன்கள், இந்த நேரத்தில் இப்படி ஆடக்கூடாது என்று அறிவுரை கூறிவருகின்றனர்.

Advertisment

டிவி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். இவரின் யதார்த்தமான நடிப்பும் குழந்தைத்தனமான நடவடிக்கையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

காயத்ரிக்கு நடனம் கற்றுக் கொடுத்த யுவராஜ் என்பவரை காதலித்து 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

நடிகை காயத்ரி யுவராஜ் ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது, சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக இருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் காயத்ரி யுவராஜ் ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார். காயத்ரி யுவராஜ் குதித்து டான்ஸ் ஆடிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும்போது, இப்படியெல்லாம் குதித்து டான்ஸ் ஆடக் கூடாது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகை காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக இருக்கும்போது ட்ரெண்டிங் பாடலுக்கு குதித்து டான்ஸ் ஆடிய ரீல்ஸ் செய்த வீடியோவைப் பார்த்த நெட்சன்கள், கர்ப்பமாக இருக்கும்போது இப்படி குதித்து டான்ஸ் ஆடதம்மா என்று அறிவுரை கூறிவருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment