Advertisment

வலி தாங்க முடியல... மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவர் வில்லியா அல்லது நல்லவரா என்ற குழப்பம் சீரியலின் தீவிர ரசிகர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

author-image
WebDesk
Jan 21, 2023 16:31 IST
வலி தாங்க முடியல... மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா!

பிரபல சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மருமகளாகன இவர், வில்லியா அல்லது நல்லவரா என்ற குழப்பம் சீரியலின் தீவிர ரசிகர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் ஹேமாஸ் டைரி என்ற யூடியூப் சேனலில் விழிப்புணர்வு தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், தான் மருத்துவமனையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்கத்தில் கட்டி இருந்ததற்காக ஆப்ரேஷன் நடந்துது. அதன்பிறகு வழக்கமாக செக்கப்க்கு ஹாஸ்பிடலுக்கு போய் வந்தேன். ஆனால் 3 மாதங்களுக்கு பிறகு போக வேண்டிய செக்கப்புக்கு நான் போகவில்லை.

அப்போது எனக்கு அது பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால்கடந்த சில தினங்களாக ஆப்ரேஷன் செய்த இடத்தில் வலி இருக்கிறது. ஆப்ரேஷன் செய்த பிறகு கட்டி இருந்த இடம் காலியாக இருந்ததாகவும் வேஸ்ட் வைத்து பில் செய்து தையல் போட்டுள்ளதாகவும் டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் இப்போது வலி அதிகமாக இருப்பதால் டாக்டரிடம் செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து ஹாஸ்பிடல் உள்ளே சென்றது முதல் வெளியில் வந்தது வரை வீடியோவாக வெளியிட்டுள்ள ஹேமா ராஜ்குமார், ஹார்மோன் சேஞ்ஜ் காரணமாக இந்த வலி வந்ததாகவும் மற்றபடி பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றும் சொன்னார்கள். இப்போது தான் நிம்மதியாக உள்ளது. உங்களுக்கும் இப்படி எதாவது உடலில் பிரச்னை இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை முடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Serial Acress Hema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment