யார் இந்த மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வருவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்?

சின்னத்திரையில் எவ்ளோ சீரியல் ஒளிபரப்பானாலும், எவ்வளவு ஹீரோயின்கள் நடித்தாலும் இப்போது அனைவரது கண்களும் மீனா மீதுதான் இருக்கிறது. ஆனால் இந்த புகழ் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைக்கவில்லை. அதற்காக அவர் நீண்ட பயணம் செய்திருக்கிறார்.

நம் எல்லாருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவை-தானே தெரியும். ஆனால், அதற்கு முன் அவர் என்னென்ன வேலைகள் எல்லாம் செய்திருக்கிறார் என்று தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்.

மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்தார்.

ஹேமா ஒரு உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.  மற்றும் பிற சில செய்தித் தொலைகாட்சிகளிலும் பணியாற்றினார்.

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். அதோடு, ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார். மேலும்

ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

மூன்று சகோதரர்களைக் கொண்ட கூட்டுக் குடும்பம் மற்றும் அவர்களின் மளிகைக் கடையான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த சீரியல், அதன் திரைக்கதையால் குடும்ப பார்வையாளர்களை ஈர்த்தது.

இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, வெங்கட் ரெங்கநாதன் மற்றும் குமரன் தங்கராஜன், சுஜித்ரா, காவ்யா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.

இதில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர். ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

கணவனிடம் கோபப்படுவது, கொழுந்தனாரிடம் வம்பிழுப்பது, நாத்தனார்களை பாடாய்படுத்துவது, வீட்டிலுள்ளவர்களை எடுத்தெறிந்து பேசுவது இதுதான் மீனாவின் முழு-நேர வேலை.  ஆனால் அவள் என்றும் தன் அப்பா, அம்மாவிடம் புகுந்த வீட்டை விட்டுக்கொடுத்ததில்லை. மீனாவின் இந்த குணம் அனைத்துமே ஏதோ ஒரு வகையில், நம் குடும்பத்திலுள்ள பெண்களை நினைவுப்படுத்துகிறது.

என்னதான் வசதியான குடும்பத்து பெண்ணாக இருந்தாலும், புகுந்த வீட்டில் இருப்பதை வைத்து அட்ஜஸ் செய்து கொள்கிறார். கார், பங்களா என சொகுசாக வாழ்ந்த மீனா, புகுந்த வீட்டில் ஓட்டை டிவிஎஸ் பைக்கை ஓட்டவும் வெக்கப்படவில்லை. யாரையாவது டபுள்ஸ் வைத்துக் கொண்டு அவர் அந்த டிவிஎஸ் பைக்கில் வருவதை பார்ப்பதை ஒரு அழகுதான். எல்லாவற்றையும் விட முக்கியமாக, எவ்வளவு கஷ்டம் வந்தபோதிலும் ஜீவாவின் கைகளை விடாமல் பிடித்துக் கொள்வது என மீனாவின் அத்தனை குணங்களும் ரசிகர்களை அவர் பக்கம் நோக்கி இழுக்கிறது.

இப்படி ஹேமா சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், ஒருகட்டத்தில் அவர் சீரியலில் இருந்து விலகுவார் என வதந்திகள் பரவியது. அப்போது ஹேமா கர்ப்பமாக இருந்தார் சீரியலில் மட்டுமல்ல, நிஜமாகவே; ஆனால் குழந்தை பிரசவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புவரை, ஹேமா சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதேபோல, குழந்தை பிறந்து மூன்று மாதத்துக்குள் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஆனால் இம்முறை ஹேமாவுடன் சேர்ந்து அவரின் குழந்தையும் நடித்துக் கொண்டிருக்கிறது. ஹேமாவின் குழந்தையும் சுமார் ஒரு வருடத்துக்கும்  மேலாக கயல் என்ற ரோலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறது. இதுவே இந்த சீரியலுக்கு பெரிய ஆத்மபலத்தை கொடுக்கிறது. இன்னும் சில நாட்களில் மீனாவின் குழந்தை கயலும் சீரியலில் டயலாக் பேச ஆரம்பித்து விடுவாள்.

இதுவரை தமிழ் சீரியலில் இதுபோன்ற பாக்கியம் யாருக்கு கிடைத்திருக்கும் என தெரியவில்லை. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress hema rajkumar life before coming to the pandiyan stores serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com