பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் தனது குழந்தையின் முதல் நாளில் இருந்து அவரின் பிறந்த நாள் வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கூட்டு குடு்ம்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைக்கும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட் அடித்துள்ளது.
ஸ்டாலின் முத்து. சுஜிதா தனுஷ், காவியா அறிவுமணி. வெங்கட், குமரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடரில் குடும்பத்தின் 2-வது மருமகளாக நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். இந்த தொடரில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இவரது கேரக்டர் வில்லியா அல்லது நல்லவரா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் அழகு சாதனை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் பியூட்டி டிப்ஸ் என வீடியோ வெளியிட்டு வருகிறார். அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
Advertisment
Advertisements
அந்த வகையில் தற்போது தனது குழந்தை சாத்விக் பிறந்து முதல் மாதத்தில் இருந்து முதல் பிறந்த நாள் வரை எடுத்த புகைப்படங்களை தனது யூடியூப் தளத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு தாயக்கும் தனது குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசிக்கும் ரசனை இருக்கும். குழந்தை வளர வளர அதனுடன் சேர்ந்து தாயும் வளர்கிறார்கள் என்று சொல்வார்கள்.
அந்த வகையில் தனது குழந்தைகயின் புகைப்படம் குறித்து பேசும் ஹேமா ராஜ்குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவரின் குழந்தை முதல்முறையாக குப்புற கவிழ்ந்த வீடியோ பதிவுகளையும் அதில் இணைத்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“