குத்தாட்டம் இப்படித்தான் இருக்குமோ… வளைகாப்பு நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஜெனிபர் டான்ஸ்
Baakiyalakshmi serial actress Jennifer and her husband dancing on baby shower function video goes viral Tamil News: நடிகை ஜெனிபருக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில், அதில் அவர் தனது கணவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
Baakiyalakshmi serial actress Jennifer and her husband dancing on baby shower function video goes viral Tamil News: நடிகை ஜெனிபருக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில், அதில் அவர் தனது கணவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
Serial Actress Jennifer Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர். சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். ராதிகா வில்லியாக மாற்றப்படுவதாலும், தான் கர்ப்பமாக இருப்பதாலும் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
Advertisment
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்திற்கு அதிக ரசிகர்கள் இருந்த நிலையில் ஜெனிபர் வெளியேறியது அவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேடி ராதிகாவாக நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
நடிகை ஜெனிபர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிறகு அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், நடிகை ஜெனிபருக்கு அண்மையில் அவரது வீட்டில் மிகவும் சிம்பிளாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஜெனிபர் தனது கணவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளதோடு லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.