Serial Actress Jennifer Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்தவர் ஜெனிபர். இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜெனிபருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. ஆனால், அவரோ இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.

பின் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், ராதிகா வில்லியாக மாற்றப்படுவதாலும் தான் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்திற்கு அதிக ரசிகர்கள் இருந்த நிலையில் ஜெனிபர் வெளியேறியது அவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது இந்த கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேடி ராதிகாவாக நடித்து வருகிறார்.

நடிகை ஜெனிபர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிறகு அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் கூட, ஜெனிபர் வீட்டில் மிகவும் சிம்பிளாக நடத்த வளைகாப்புக்கு பிறகு அவரது கணவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டார். அந்த வீடியோ மற்றும் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.


இந்நிலையில், நடிகை ஜெனிபருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“