Advertisment

Bagyalakshmi Serial: ராதிகாவின் பர்சனல் ரீசன் இதுதான்… அப்புறம் ஏன் கதையை குறை சொன்னீங்க?

Reason behind serial actress jennifer leaving baakiyalakshmi serial Tamil News: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜெனிபர் 2 முக்கிய காரணங்களை குறிப்பிட்டு இருந்தார். அவை இரண்டில் ஒன்று சொந்த காரணம் என்றும் மற்றொன்று பிற காரணம் என்றும் தெரிவித்து இருந்தார்.

author-image
WebDesk
New Update
Serial Actress Jennifer Tamil News: personal reason behind Jennifer leaving baakiyalakshmi serial

Serial Actress Jennifer Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜெனிபர். இவர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். ஜெனிபர் முதலில் ஒரு குரூப் டான்சராக தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். பிறகு சில படங்களில் முன்னணி டான்சராக இருந்தார். அதன் பிறகு சில படங்களில் நாயகியாகவும் நடித்திருந்தார்.

Advertisment
publive-image

சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜெனிபர் 2 முக்கிய காரணங்களை குறிப்பிட்டு இருந்தார். அவை இரண்டில் ஒன்று சொந்த காரணம் என்றும் மற்றொன்று பிற காரணம் என்றும் தெரிவித்து இருந்தார். பிற காரணம் என்று அவர் குறிப்பிட்டு இருந்தது அவருக்கு இந்த சீரியலில் வழங்கப்பட்டுள்ள 'ராதிகா' என்ற கதாபாத்திரம் இப்போது சற்று எதிர்மறையான கதாபாத்திரமாக இருப்பதால் அதைத் தொடர விரும்பவில்லை என்றிருந்தார்.

publive-image

சொந்த காரணத்தை ஜெனிபர் குறிப்பிடாமல் இருந்து வந்த நிலையில் அதை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், அவர் தனது சொந்த காரணமாக தனக்கு 2 வது குழந்தை பிறக்கவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஜெனிபர்.

publive-image

ஜெனிபர் – காசி தம்பதிக்கு ஏற்கனவே டீன் ஏஜில் ஒரு மகளும் உள்ளார். மேலும் இவர்களது குடும்ப புகைப்படம் இணைய பக்கங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Serial Actress Tv Serial Tamil Serial News Baakiyalakshmi Serial Tamil Serial Update Vijaytv Serial Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment