விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் நடித்து வரும் அனைவருக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
Advertisment
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் வைரலாக பரவியது.
முதலில் விஜே சித்ரா முல்லையாக நடித்து வந்த நிலையில், திடீரென அவர் மரணமடைந்ததால், காவியா அறிவுமணி முல்லை கேரக்டரில் நடித்து வந்தார்.
ஆனால் சமீபத்தில் காவியாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்கிடெக்ட் படிப்பில் பட்டம் பெற்ற காவிய இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது காவியா தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் காவியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருமு் நிலையில் நீங்கள் ஏன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இல்லை என்ற கேள்வியே பெரும்பாலான ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil