பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
சென்னையில் பிறந்த வளர்ந்த காவியா அடிப்படையில் ஆர்க்கிடெக்ட் பட்டம் பெற்றவர். படித்துக்கொண்டே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன்பிறகு சீரியலில் நடிக்க தொடங்கிய அவர், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பிரபலமானார்.
இந்த சீரியல் அவருக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல ரீச் கொடுத்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்இருந்து விலகிய காவியா, தனது கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் படிப்பை முடித்து பட்டம் பெற்ற இவர், தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா அறிவுமணி அவ்வப்போதுபோட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil