Advertisment

பாக்யலட்சுமி சீரியல் செல்வி வீட்டில் விசேஷம்: மகன்- மருமகளுடன் போட்டோ

கம்பம் மீனா, சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

author-image
WebDesk
New Update
Kambam Meena

நடிகை கம்பம் மீனா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கம்பம் மீனா வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கணவரை பிரிந்த ஒரு பெண் தனது வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுகிறார் என்ற அடிப்படையில் திரைகக்தை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் நாயகி பாக்யாவுக்கு ஆதாவாக வேலைக்காரி கேரக்டரில் நடித்து வருபவர் கம்பம் மீனா. தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாக்கியலட்சுமி மட்டுமல்லாமல், பாண்டியன் ஸ்டோர்ஸ், ஜீ தமிழின் சீதாராமன் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வரும் கம்பம் மீனா, சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மீனா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகனுக்கு திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட கம்பம் மீனா தற்போது மருமகள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். பிஸினஸ் செய்து வரும் கம்பம் மீனா சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருவதாக கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment