/tamil-ie/media/media_files/uploads/2021/06/tamil-indian-express-2021-06-18T130119.409.jpg)
Serial actress Kavitha Tamil News: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகம் வரவேற்பு சீரியலாக 'என்றென்றும் புன்னகை' சீரியல் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இந்த சீரியலில் கதைக்களத்தை குறிப்பிடலாம். மேலும் இந்த சீரியலில் வில்லியாகவும், நாயகர்கள் 2 பேருக்கும் பாட்டியாகவும் வரும் நடிகை கவிதாவையும் கூறலாம்.
நடிகை கவிதா தனது எதார்த்த நடிப்பால் பலரையும் கவர்ந்தவர். மேலும் பல திரைப்படங்களில் அம்மா ரோலில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதோடு ஆந்திராவில் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.
தற்போது பல்வேறு சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், அம்மாவாகவும் நடித்து வரும் நடிகை கவிதா, நீடித்து வரும் கொரோனாவால் சிறிது காலம் விலகி இருந்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/tamil-indian-express-2021-06-18T131109.632-1.jpg)
இந்த நிலையில், கொரோனாவுக்கு தனது மகனை இழந்து சோகத்தில் தற்போது நிலைகுலைந்துள்ளார் கவிதா. அவரின் கணவர் மற்றும் மகனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மகன் சாய் ரூப்வை மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் சாய் ரூப்.
மகனை இழந்து வாடி வரும் தாய் கவிதாவிற்கு உறவினர்கள், சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உட்பட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.