/indian-express-tamil/media/media_files/2025/09/22/reshma-2025-09-22-16-35-56.jpg)
ரேஷ்மா பசுபுலேட்டி கிட்ட இருக்குற அந்த விஷயம் என்கிட்ட இல்ல: சீரியல் நடிகை கிருத்திகா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் கிருத்திகா அண்ணாமலை. சின்னத்திரையில் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. வில்லத்தனத்தில் தன்னை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது என்றும் அளவிற்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
‘மெட்டி ஒலி’ தொடரில் சாதுவான பெண்ணாக நடித்த கிருத்திகா காலப்போக்கில் தனக்கு வில்லத்தனம் தான் செட்டாகும் என்பதை புரிந்து கொண்டு சீரியல்களில் வில்லியாக நடிக்க தொடங்கினார். துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும் தன்னுடைய அபாரமான நடிப்பால் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
முந்தானைமுடிச்சு, செல்லமே ,வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். இதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்த சின்னத்தம்பி சீரியலிலும் நடிப்பில் பட்டையை கிளப்பினார். நடிகை கிருத்திகா நடிப்பது மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களிலும் வந்தார். கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
தற்போது, இவர் ‘மல்லி’, ‘கார்த்திகை தீபம்’ போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கிருத்திகா, ரேஷ்மா பசுபுலேட்டி கிட்ட இருக்குற ஒரு விஷயம் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் அவரை விட உயரமாக இருப்பேன். இதுகுறித்து அவரே என்னிடம் பேசியுள்ளார்.
அதனால் நான் அதை பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். அவர் அவருடைய ஸ்கின்னை நன்றாக பராமரிப்பார். அது என்னிடம் இல்லை” என்றார். முன்னதாக நடிகை கிருத்திகா தன்னுடைய சம்பளம் குறித்து கூறியிருந்தார்.
இந்த கேள்விக்கு இந்த பதில் தான் வேணும்னு நேரடியாவே கேட்டுடறாங்க இப்போல்லாம் 🤦
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) September 22, 2025
பெருசா தெரியுறத மட்டும் தான் சொல்றீங்க 🚶
வெளங்கிடும்... pic.twitter.com/5aJUgKLCQa
அதில், “மெட்டி ஒலி தொடரில் ஒரு நாளைக்கு எனக்கு 750 ரூபாய் சம்பளமாக கொடுத்தனர். அதன் பிறகு ஏ.வி.எம் சார்பில் ஒரு தொடரில் நடித்தேன் அதற்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் கொடுத்தனர். ‘மெட்டி ஒலி’ நாடகத்தை விட அந்த நாடகத்தில் மிகவும் குறைவாகவே சம்பளம் வாங்கினேன்.
இப்பொழுது, ‘மல்லி’, ‘கார்த்திகை தீபம்’ என்ற இரு தொடர்களில் நடித்து வருகிறேன். அதில் ‘மல்லி’ தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வாங்குகிறேன். ‘கார்த்திகை தீபம்’ தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு 12,000 ரூபாய் வாங்குகிறேன்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.