வீடியோவை லீக் பண்ணிடுவேன்: டிவி நடிகையை மிரட்டிய காதலன்

போட்டோவை இணைய தளத்தில் பகிர்ந்து சினிமா வாழ்க்கையை அழித்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

serial actress marriage issue serial
serial actress marriage issue serial

serial actress marriage issue serial : சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சின்னத்திரை நடிகை கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் அந்த நடிகை.. 24 வயதாகிறது.. நிறைய தமிழ் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.. அதேபோல சினிமாவிலும் நடித்து வருகிறார். இவரது முன்னாள் காதலன் பெயர் ராஜேஷ்.. அவருக்கு 29 வயதாகிறது.. இந்நிலைலயில், ராஜேஷ் மீது நடிகை திருமங்கலம் மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், கீழ்கட்டளை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் எனக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருக்கின்றது. இதற்கிடையில் ராஜேஷ் ஒரு ஹோட்டலில் இவன்ட் மேனேஜ்மென்ட் செய்வதாகவும், அதை பார்க்க என்னை வரும்படி அழைத்தார். பின்பு நாங்கள் இருவரும் தனிமையில் இருந்தோம்.

பின்னர் அவருடைய நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. என்னுடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். அது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, `என்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை’என்றார்.

அதன்பிறகு 10 லட்சம் கொடுத்தால்தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்றும், இதை வெளியில் கூறினால் மார்பிங் செய்த போட்டோவை இணைய தளத்தில் பகிர்ந்து சினிமா வாழ்க்கையை அழித்து விடுவேன் எனவும் மிரட்டினார். இதனால் என்னால் முயன்ற அளவுக்கு 2.50 லட்சம் சேர்த்து ராஜேஷிடம் கொடுத்தேன். இது பத்தாது என்று ராஜேஷ் என் மீது ஆசிட் வீசி விடுவதாக மிரட்டினார். என கூறியுள்ளார்.

இந்நிலையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ராஜேஷ் பணம் கொடுத்து ஈடுகட்டிதாகவும் தகவல் சொல்லப்படுகின்றது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் திருமணத்திற்கு முன்பு உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress marriage issue serial actor file case against her lover

Next Story
நடிகர் விஜய்க்கு சமூக பொறுப்பு இல்லையா? சர்ச்சையில் மாஸ்டர் ரிலீஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com