Advertisment

'எங்கள் குடும்பம் வளர்கிறது...' கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சீரியல் நடிகை; ரசிகர்கள் வாழ்த்து மழை!

ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சீரியல் நடிகை எங்கள் குடும்பம் வளர்கிறது என்று தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
neha gowda

சீரியல் நடிகை எங்கள் குடும்பம் வளர்கிறது என்று தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன் டிவி மற்றும் விஜய் டிவி  என முக்கிய டிவிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சீரியல் நடிகை எங்கள் குடும்பம் வளர்கிறது என்று தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisment

சன் டிவியில் ஒளிபரப்பான ’கல்யாண பரிசு’ விஜய் டிவியில் ஒளிபரப்பான   ‘பாவம் கணேசன்’ மற்றும்  ‘காயத்ரி’ ’குணா’ போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து அவர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நேஹா கவுடா. பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவருடைய நடிப்பைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை நேஹா, சந்தன் கவுடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, நேஹா கவுடா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். கர்ப்பமாக இருப்பதை ஸ்கேன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து நேஹா கவுடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எங்கள் குடும்பம் வளர்ந்து வருகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், “எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய நபரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம், எங்கள் இருவரது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

 “எங்கள் குடும்பம் தற்போது இரண்டில் இருந்து மூன்றாக வளர்ந்து வருகிறது, புதிய அத்தியாயத்தை தொடங்க நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம், எல்லையற்ற அன்புகள், முடிவு இல்லா புன்னகைகள், எங்கள் வாழ்க்கையில் ஆரம்பம் ஆகிறது” என்றும் நேஹா கவுடா தனது சமூக வலை தளத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை நேஹா கவுடாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamil serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment