'அங்கே மேக்கப் போடாமல் ரொம்ப எளிமை': மலையாள சீரியலில் தடம் பதித்த விஜய் டி.வி நடிகை

நடிகை கோமதி பிரியா' செம்பநீர்ப்பூவு' என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார். கோமதி பிரியா மேக் அப் போடாமல் எளிமையாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

நடிகை கோமதி பிரியா' செம்பநீர்ப்பூவு' என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார். கோமதி பிரியா மேக் அப் போடாமல் எளிமையாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Priya Balakumaran 1

விஜய் டிவி ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை கோமதி பிரியா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் பார்வையாளர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரபாகி வரும்  ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை கோமதி பிரியா மலையாள சீரியலில் தடம் பதித்துள்ளார். அங்கே மேக்கப் போடாமல் மிகவும் எளிமையாக நடித்து வருகிறார்.

Advertisment

Priya Balakumaran

இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன், நடிகர் வெற்றி வசந்த், நடிகை கோமதி பிரியா ஆகியோர் நடித்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் யாரும் எதிர்பாராத வகையில், பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகியாக நடிக்கும் மீனா, தனது இயல்பான தோற்றம் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். அதே போல, இந்த சீரியலின் ஹீரோ வெற்றி வசந்த் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் சின்னத்திரையின் விஜய் சேதுபதி என்று அழைக்கும் அளவுக்கு கலக்கி வருகிறார். இந்த சீரியலில் கோமதி பிரியா - வெற்றி வசந்த் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களைக் ஈர்த்து வருகிறது.

Advertisment
Advertisements

Siragadikka Aasai

நடிகை கோமதி பிரியா இன்ஸ்டாகிராமில் பிரியா பாலகுமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். நடிகை கோமதி பிரியா தமிழ் சீரியலில் மட்டுமில்லாமல், தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். 

ஜீ தெலுங்கு சேனலில்,  ‘ஹிட்லர் கேரி பெல்லம்’ என்ற தெலுங்கு சீரியலில், பானுமதி அபினவ் ஜகர்லமுடியாக கோமதி பிரியா நடித்தார். தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் சீரியலில் மீனவாக நடித்து வருகிறார்.

Priya Balakumaran

நடிகை கோமதி பிரியா, சீரியலில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் எங்கே சென்றாலும் மேக்கப் இல்லாமல் இயல்பாக செல்கிறார். 

நடிகை கோமதி பிரியா, சீரியலில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் எங்கே சென்றாலும் மேக்கப் இல்லாமல் இயல்பாக செல்கிறார். கோமதி பிரியா வெளியூர்களுக்கு செல்லும் போதெல்லாம் மக்களோடு மக்களாக துளி மேக்கப் இல்லாமல் சுற்றி வருகிறார். இதனால், ரசிகர்கள் இவரை தங்களில் ஒருவராக பார்க்கிறார்கள். இவர் சமீபத்தில் ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோயில் சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் மிகவும் எளிமையாக தோற்றமளிக்கிறார்.

Priya Balakumaran

கோமதி பிரியா தற்போது கேரளா புடவையில் ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோயில் சென்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மலையாள தொலைக்காட்சியில் நீங்கள் நடிக்கும் சீரியலுக்காக வரவேற்கிறோம் என வாழ்த்து தெரிவித்து வருகிறார். 

நடிகை கோமதி பிரியா' செம்பநீர்ப்பூவு' என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார். கோமதி பிரியா மேக் அப் போடாமல் எளிமையாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: