குடும்ப தகராறு: பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை

Tamil Tv Serial actress Priyanka commits suicide : பிரியங்காவுக்கும் கூடைப்பந்து பயிற்சியாளர் அருண்பாலாவுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

Tamil Tv Serial actress Priyanka commits suicide : பிரியங்காவுக்கும் கூடைப்பந்து பயிற்சியாளர் அருண்பாலாவுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குடும்ப தகராறு: பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை

சின்னத்திரை நடிகை பிரியங்கா வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரியங்கா உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தற்கொலைக்கு முன்பு பிரியங்கா கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

publive-image

Advertisment
Advertisements

நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட தகவலை அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் முதலில் பார்த்து போலீசாருக்கு புகார் அளித்ததாகவும், இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாராணையில் தெரிய வந்துள்ளது. பிரியங்காவுக்கும் கூடைப்பந்து பயிற்சியாளர் அருண்பாலாவுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. மேலும் கருத்து வேறுபாடு காரணமாக 2 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தப் பின்னணியில்தான் பிரியங்கா மரணமடைந்துள்ளார் என்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: