சின்னத்திரை சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவர் புதிக தகவல் ஒன்றைய பகிர்ந்து ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. முன்னதாக தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிரியங்காவின் பெயர் மறந்து அவரை அனைவரும் ரோஜா என்று அழைக்கும் அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது இந்த சீரியல்.
ரோஜா சீரியல் ஒரு கட்டத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வந்தார். ரோஜா சீரியல் கொடுத்த வரவேற்பை பெற்றது. ரோஜா சீரியல் போலவே இந்த சீரியலும் பிரியங்காவை இல்லத்தரசிகள் மத்தியில் கொண்டு சேர்ந்த நிலையில், திடீரென தனது காதலர் ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்டார்.
திருமத்திற்கு பின் பிரியங்கா நல்காரி, சீதா ராமன் சீரியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது ஜீ தமிழில் நளதமயந்தி என்று என்ற சீரியலில் நடித்து வருகிறார், சமீபத்தில் தொடங்கிய இந்த சீரியலில் பிரிங்காய உணவகம் நடத்தி வரும் தமயந்தி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக திருமணத்திற்கு பின் அவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பிரியங்கபா தனது கணவருடன் இணைந்து புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்று தொடங்கி இருக்கின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்களை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திருமணத்திற்கு பின் பிரியங்கா நல்ல செய்தி சொல்லியிருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“